| வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள் |
|
வெளிநாட்டுத் தூதரகக் கிளை இலங்கைப் பிரசாவுரிமையை கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதகரத்தினூடாக அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாவிடின் மிகவும் அருகில் உள்ள நாட்டில் அமைந்துல்ல இலங்கைத் தூதரகத்தினூடாகவேனும் விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்தின் வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
விசாரணைகள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திரு. G. P. J. குமார தொலைபேசி : 5329030 நீடிப்பு : 9030 பக்ஸ் : 2674671 மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக் கிளையினூடாக விண்ணப்பிக்கும் விதம்: அவசியமான ஆவணங்கள்: கடவுச்சீட்டு விநியோகத்தைப் பார்க்கவும். விண்ணப்பப் பத்திரங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும், உதவிச் சேவைகள்
அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதெப்படி? குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை? மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும் இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை? முதலாவது பிரதிக்காக இலங்கை ரூபா 250/- ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாயின் (அத்தாட்சிப்படுத்தக்கூடிய உச்சப் பிரதிகளின் எண்ணிக்கை 3) இலங்கை ரூபா 500/-
மொழிபெயர்ப்புச் சேவை கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அராபிய மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும். எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது? விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும். இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணம் யாது? ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,000/- அறவிடப்படும். |