| கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் |
|
இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல் உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும். கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம். கடமை நேரங்கள் யாவை?
கொழும்பு 10, ஆனந்த ராஜகருணா மாவத்த, இலக்கம் 41 இல் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவுக்கு (01 வது மாடி) அனைத்து விதமான கடவுச்சீட்டு விண்ணப்ப் பத்திரங்களையும் ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக. கடவுச்சீட்டு வகைகள் யாவை?
|