www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் கடவுச்சீட்டினை விநியோகித்தல்
கடவுச்சீட்டினை விநியோகித்தல்
  1. அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு
  2. குறித்துரைத்த நாடுகளுக்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  3. இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பௌத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்கள்.
  4. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களால் விநியோகிக்கப்படுகின்ற இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகளும் அடையாளச் சான்றிதழ்களும்.
  5. பராயமடையாதவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு.
  6. பெற்றோர்களின் கடவுச்சீட்டுகளில் பராயமடையாதவர்களை உள்ளடக்குதல்.
  7. இரட்டைப் பிரசாவுரிமை உடையவர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு
சாதாரண கடவுச்சீட்டு
அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  1. தற்போது உள்ள கடவுச்சீட்டு (விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  2. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
  3. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  4. தேவைக்கேற்றவாறு விவாகச் சான்றிதழ் (விவாகத்தின் பின்னர் பாவிக்கப்படுகின்ற பெயரை உறுதிப்படுத்துவதற்காக)
  5. உங்களின் தொழிலை உறுதி செய்யும் கடிதம், தொழிற் சான்றிதழ் அல்லது அனுமதிப் பத்திரம்.
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெறுவதெப்படி?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  2. கண்டி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிராந்திய அலுவலகங்களிலிருந்து.
  3. உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்திலிருந்து.
  4. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக.
  5. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சுடக்குக.
விண்ணப்பப் பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் யாது?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடம்.
  2. கண்டி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிராந்திய அலுவலகங்களிடம்.
  3. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம்.

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் செல்லும்?
சாதாரண அடிப்படையில் - 10 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - அதே தினத்தில்

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டின் தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 2500.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 7500.00 Otop_1



இராஜதந்திர கடவுச்சீட்டு

கடவுச்சீட்டில் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலேயொழிய, இக்கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான ஆட்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்களுக்காக இக்கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.
"தகைமைபெற்ற ஆட்களின் பெயர்ப் பட்டியலுக்கான சுற்றறிக்கையைப் பார்க்கவும்."

விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  2. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை இங்கு பதிவிறக்கம் செய்க.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
  1. விண்ணப்பதாரியின் மிக அண்மையில் பெறப்பட்ட கடவுச்சீட்டு (தயவுசெய்து விபரங்களுக்காக கீழே பார்க்கவும்.)
  2. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  3. விண்ணப்பதாரியின் தேசிய அழைடயாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  4. விவாகச் சான்றிதழ் அவசியத்திற்கேற்ப. (விவாகத்திற்குப் பிந்திய பெயரை உறுதிப்படுத்துவதற்காக.)
  5. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம்.
    • வெளிநாட்டுப் பதவிகளுக்காக - வெளியுறவு அமைச்சின் கோரிக்கைக் கடிதம்.
    • ஏனைய ஆட்களுக்காக - வரிசை அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம்.
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இராஜதந்திர கடவுச்சீட்டொன்றினை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும்?

 

சாதாரண அடிப்படையில் - 10 வேலை நாட்களுக்குள்
அவசர அடிப்படையில் - ஒரே நாளில்
இராஜதந்திர கடவுச்சீட்டுக்கான தயாரிப்புக் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 2500.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 7500.00 Otop_1


உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்காக எவர் விண்ணப்பிக்கலாம்?
பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த ஆட்களுக்காக உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்,

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  • அநுராதபுரம், மாத்தறை, கண்டி பிராந்திய அலுவலகங்களிலிருந்து.
  • விண்ணப்பப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்துகொள்க.
விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • தற்போது பாவிக்கும் கடவுச்சீட்டு (விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  • அவசியத்திற்கேற்ப விவாகச் சான்றிதழ். (விவாகப் பெயரை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக)
  • மாகாண சபைகள், திணைக்களங்கள், வரிசை அமைச்சுக்களின் தலைமை அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம்.
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்றை ஏற்கெனவே நீங்கள் வைத்திருந்தால் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் ஆரம்பிக்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு.

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும்?
சாதாரண அடிப்படையில் - 10 வேலை நாட்களுக்குள்
அவசர அடிப்படையில் - ஒரே நாளில்

 

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் : இலங்கை ரூபா. 2500.00
அவசர அடிப்படையில் : இலங்கை ரூபா. 7500.00 Otop_1


 


குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கான செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஒரு சில தெற்காசிய நாடுகளுக்கும் பயணஞ் செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு இக்கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும். இங்கு வீசா அனுமதிச் சீட்டுக்கான குறைந்தளவு பக்கங்களே காணப்படுகின்றன. அத்துடன் தயாரித்தல் கட்டணம் அனைத்து நாடுகளுக்காக செலுத்த வேண்டிய கட்டணத்தைவிடக் குறைவானதாகும்.

குறித்துரைத்த நாடுகளின் பெயர்ப்பட்டியல்
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுக் குடியரசு, ஈரான், ஈராக், லெபனான், சிரியா, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், குவைத், கட்டார், பஹ்ரேன், யேமன்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • விண்ணப்பதாரியின் மிக அண்மையில் பெறப்பட்ட கடவுச்சீட்டு (தயவுசெய்து விபரங்களுக்காக கீழே பார்க்கவும்.)
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  • விவாகச் சான்றிதழ் அவசியத்திற்கேற்ப. (விவாகத்திற்குப் பிந்திய பெயரை உறுதிப்படுத்துவதற்காக.)
  • உங்கள் தொழிலை உறுதிப்படுத்தும் கடிதம், தொழிற் சான்றிதழ் மற்றும் அனுமதிப் பத்திரம்.
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கான கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் செல்லும்?
சாதாரண அடிப்படையில் - 10 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - அதே தினத்தில்

குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கான கடவுச்சீட்டின் தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - LKR. 1000.00
அவசர அடிப்படையில் - LKR.2500.00 Otop_1


அவசர சான்றிதழ் (EC)

 
அவசர சான்றிதழ் என்றால் என்ன?
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் பயணஞ் செய்கின்ற இலங்கை பௌத்த யாத்திரிகர்களுக்காக மாத்திரம் விநியோகிக்கப்படுகின்ற பிரயாண ஆவணமே அவசர சான்றிதழ் ஆகும். இந்த ஆவணம் 2 வருடங்களுக்காக மாத்திரம் செல்லுபடியாவதோடு, அதனை மேலும் 2 வருடங்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்து நீடித்துக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக தயவு செய்து கடவுச்சீட்டுப் புதுப்பித்தல் செயற்பாட்டினைப் பார்க்கவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • மிக அண்மையில் பெறப்பட்ட விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு (மேலதிக விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
என்னிடம் பிறப்புச் சான்றிதழோ தேசிய அடையாள அட்டையோ இல்லாவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
பின்வரும் ஆவணங்களில் ஒன்றையோ பலவற்றையோ நீங்கள் சமர்ப்பிக்கலாம். அதாவது,
  • விண்ணப்பதாரியின் சாரதி அனுமதிப் பத்திரம்.
  • விண்ணப்பதாரியின் முதியோர் அடையாளச் சான்றிதழ்.
  • விண்ணப்பதாரியின் ஓய்வூதிய அடையாளச் சான்றிதழ்.
  • தேடல் பெறுபேறு; பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தேடல் பெறுபேற்று ஆவணமும் விண்ணப்பதாரியின் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழும்.
  • ஊக வயதுச் சான்றிதழ். (பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட)
* ஏற்கெனவே உங்களிடம் M அல்லது N பிரிவைச் சேந்த செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அவசர சான்றிதழ் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N அல்லது EC எழுத்துக்களில் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனை இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  • அநுராதபுரம், மாத்தறை, கண்டி பிராந்திய அலுவலகங்களிலிருந்து.
  • உங்கள் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மூலமாக.
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலிருந்து.
  • அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்க.
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
  • அநுராதபுரம், மாத்தறை, கண்டி பிராந்திய அலுவலகங்களில்.
அவசர சான்றிதழை வழங்க எவ்வளவு காலம் செல்லும்?
சாதாரண அடிப்படையில் - 10 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - இயலாது

அவசர சான்றிதழுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 500.00 (அவசர அடிப்படையில் - ஏற்புடையதன்று) Otop_1



இயந்திரத்தில் வாசிக்க இயலாத கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக பயண ஆவணங்கள்

இந்த ஆவணங்கள் யாவை?
கடவுச் சீட்டினைத் தொலைத்த அல்லது களவாடப்பட்ட அல்லது வெளிநாட்டில் இருக்கும் போது காலாவதியாகியுள்ள வேளையில் இலங்கையருக்கு விநியோகிக்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

இந்த ஆவணங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடமிருந்து இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
நீங்கள் மீண்டும் சிலகாலத்திற்கு இலங்கைக்கு திரும்பிவர எதிர்பார்ப்பீர்களாயின் நீங்கள் இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டிற்கு அல்லது தற்காலிக பயண, ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

செல்லுபடியாகும் காலப்பகுதி யாது?

இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டல்லாத தற்காலிக பயண ஆவணம் இலங்கைக்கு ஒரு தடவை பயணஞ் செய்ய மாத்திரமே செல்லுபடியாகும்.

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைப்பதன் மூலமாக.

அடையாளச் சான்றிதழ்
அடையாளச் சான்றிதழ் என்றால் என்ன?
வெளிநாட்டவரொருவரின் கடவுச்சீட்டு தொலைந்து போயுள்ளவிடத்து அல்லது இலங்கையில் இருக்கும் போது காலாவதியானால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

அடையாளச் சான்றிதழைப் பெறுவதெப்படி?
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ரூ. 2,500/- ஐ செலுத்தி அன்றைய தினத்திலேயே அடையாளச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். Otop_1


பராயமடையாத விண்ணப்பதாரிகள் / மகவேற்பு விண்ணப்பதாரர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு
பராயமடையாதோர் என்றால் யார்?
16 வயதுக்கு குறைந்த எந்த ஒருவரும் இதன் பொருட்டு பராயமடையாதோராகக் கருதப்படுவர்.

இலங்கை கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக பராயமடையாத ஒருவர் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் பொருட்டு விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்கப்படுகின்ற அலுவலகத்திற்கு விண்ணப்பதாரி வரும்போது தமது பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலருடன் வருகைதரல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமொன்று விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழ்.
  • பெற்றோரது கடவுச்சீட்டு (தரவுப் பக்கத்தினதும் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தினதும் நிழற்பிரதிகளுடன்).
  • பெற்றோருக்கு கடவுச்சீட்டு இல்லாவிடின் சத்தியக் கடதாசியுடன் தேசிய அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பெற்றோரது விருப்பம் தெரிவிக்கும் கடிதம்.
மகவேற்புப் பிள்ளைக்காக கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் கீழ்க்காணும் மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.
மகவேற்புச் சான்றிதழ்.
அதற்கான நீதிமன்றக் கட்டளை.
நன்னடத்தை, சிறுவர் பாதுகாவல் ஆணையாளரது கடிதம்.

Special Notes Originals of the documents must be submitted along with photocopies. The following documents should be submitted under the special circumstances mentioned below.

If the applicant is born outside of Sri Lanka, Consular Birth Certificate and Citizenship Registration Certificate.

If parent(s) of the applicant do not possess a valid Sri Lankan passport, an affidavit confirming that fact and the National Identity Card.

If parent(s) of the applicant are dead, Death Certificate(s), Legal Guardian’s Identification Document, Guardian’s consent letter and a report from Grama Niladhari attested by the Divisional Secretary.

If one or both parents are abroad, the consent letter and the passport copies of parents should be certified by the relevant Sri Lankan Mission.
If both parents are abroad acceptable authorization letter given by the parents to the legal guardian.

If the parents are divorced, Divorce Certificate and the court order stating the right to the custody of the child/ children.

If the child has been abandoned by the parents, certified copy of the police report and a confirmation letter from the Grama Niladhari countersigned by the Divisional Secretary. Otop_1


பெற்றோரது கடவுச்சீட்டில் பராயமடையாதோரை உள்ளடக்குதல்
பராயமடையாதோர் என்றால் யார்?
16 வயதுக்கு குறைந்த எந்த ஒருவரும் இதன் பொருட்டு பராயமடையாதோராகக் கருதப்படுவர்.

ஒரு கடவுச்சீட்டில் எத்தனை சிறுவர்களை உள்ளடக்கலாம் ?
ஒரு கடவுச்சீட்டில் உங்களால் உச்சமட்ட எண்ணிக்கையாக ஆறு (06) பேர்களின் பெயர்களை உள்ளடக்கலாம்.

எங்கள் குடும்பத்தில் 16 வதுக்குக் குறைந்த ஆறுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
பெற்றோரின் ஒருவரது கடவுச்சீட்டில் நீங்கள் ஆறு பிள்ளைகள் வரை உள்ளடக்க இயலுமென்பதோடு மற்றவரின் கடவுச்சீட்டில் மேலும் ஆறு பேர் வரை உள்ளடக்கப்படல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க அவசியமான ஆவணங்கள் யாவை?
  • விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு
  • பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்
  • விண்ணப்பதாரியின் வாழ்க்கைத்துணையின் கடவுச்சீட்டுடன் தரவுப் பக்கத்தினதும் பிள்ளைகளினதும் பிள்ளைகளின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தினதும் நிழற்பிரதிகள்
  • வாழ்க்கைத்துணையின் விருப்பம் தெரிவிக்கும் கடிதம்.
வளர்ப்புப் பிள்ளையின் பெயரை உள்ளடக்கி விண்ணப்பிப்பதாயின் கீழே குறிப்பிடப்பட்ட மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.
  • மகவேற்புச் சான்றிதழ்
  • நீதிமன்றக் கட்டளை
  • நன்னடத்தை, சிறுவர் பாதுகாவல் ஆணையாளரது கடிதம்.
விசேட அறிவித்தல் - ஆவணங்களின் பிரதிகளுடன் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பின்வரும் விசேட சந்தர்ப்பங்களில் ஏற்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • விண்ணபதாரி இலங்கைக்கு வெளியில் பிறந்திருப்பின் கொன்சல் அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழும் பிரசாவுரிமைப் பதிவுச் சான்றிதழும்.
  • விண்ணப்பதாரியின் பெற்றோர்கள் இலங்கையின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் உரிமையாளர்கள் அல்லாவிடின் அவ்விடயங்களை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசியும் தேசிய அடையாள அட்டையும்.
  • விண்ணப்பதாரியின் பெற்றோர்கள் இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ் / சான்றிதழ்கள், சட்டபூர்வ பாதுகாவலர்களின் அடையாள ஆவணங்கள், பாதுகாவலரின் விருப்பம் தெரிவிக்கும் கடிதம் மற்றும் பிரதேச செயலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
  • பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரும் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பின் அவர்களின் விருப்பம் தெரிவிக்கும் கடிதம் மற்றும் கடவுச்சீட்டின் பிரதிகள் சம்பந்தப்பட்ட இலங்கை தூதரகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
  • பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் இருப்பின் பெற்றோர்களால் சட்ட ரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரம் அளிக்கும் கடிதம்.
  • பெற்றோர் விவாகரத்து பெற்றிருப்பின் விவாகரத்துச் சான்றிதழும் பிள்ளையின் / பிள்ளைகளின் கட்டுக்காப்புக்கு உள்ள உரிமையைக் குறிப்பிட்டு வழங்கப்பட்ட நீதிமன்றக் கட்டளை.பிள்ளை பெற்றோர்களால் கைவிடப்பட்டிருப்பின் பொலிஸ் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியும் பிரதேச செயலாளரால் மேலொப்பம் இடப்பட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதமும். Otop_1

இரட்டைப் பிரசாவுரிமை கொண்டுள்ளவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு
இலங்கையிலும் வேறொரு நாட்டிலும் பிரசாவுரிமை பெற்ற ஒருவர் கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்ததிரத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.)
  • பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரம்.
  • இரட்டைப் பிரசாவுரிமைச் சான்றிதழ் (பிரசாவுரிமையைப் பதிவு செய்யும் போது பணம் செலுத்தியமைக்கான பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டின் நிழற் பிரதியும் ஏற்றுக்கொள்ளப்படும்.)
  • தேசிய அடையாள அட்டை.
  • பிறப்புச் சான்றிதழ் மற்றும் / அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்.
Otop_1
விசேட அறிவித்தல்: மேற்படி ஆவணங்களின் நிழற்பிரதிகளுடன் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.
 
api_wenu_api

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Mattala Rajapaksa International Airport (MRIA)

The country’s 2nd International Airport, Mattala Rajapaksa International Airport commenced operation with the landing of a Sri Lankan flight with president onboard.

The Department of Immigration & Emigration too took all necessary steps to fulfill Immigration & Emigration formalities at MRIA.

 


 
FUTUREGOV AWARDS CELEBRATE GOVERNMENT ICT ACHIEVEMENTS

The sixth annual FutureGov Awards ceremony was held on 19 October 2012, on the final day of FutureGov Summit in Chiang Mai, Thailand. These technology awards are given each year to government, education or healthcare organisations to recognise and celebrate the most successful modernisation programmes in the region.

Read more...
 
Sri Lankan Passports fees and Validity Period for Minors

With effect from 01st of September 2012, fees and validity period of new passports for Minor Children, below 16 years of age

Read more...
 
Dual Citizenship

The Department of Immigration and Emigration highly appreciate the applicants who applied the dual citizenship with concentration on delivering their valuable commitment to Sri Lanka.

Due to the suspension of awarding dual citizenship temporarily, it is unable to proceed some received applications.

However, the department would like to inform the applicants who did not receive the certificates will be considered under the new scheme. (The  new scheme will be introduced end of this year.)


 
Migrant Accommodating Center

The Department of Immigration and Emigration has been maintaining its Migrant accommodating center for accommodating foreign nationals who violate visa conditions in Sri Lanka since 1987.

Read more...
 
Location