| கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல் |
|
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும். புதுப்பித்தல் 2 மணித்தியாலங்களில் செய்து கொடுக்கப்படும்.
(பதிவிறக்கம் செய்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் மூலமாக) எனது கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலவரையறையை நீடித்துக் கொள்வதெப்படி? 5 வருட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட M வகையைச் சேர்ந்த கடவுச்சீட்டினை அடுத்து 5 வருட காலத்திற்காக நீடித்துக் கொள்ளலாம். நீடிக்கும் ஒவ்வொரு வருடத்திற்காகவும் ரூ. 200/- கட்டணம் அறவிடப்படும்.
ஏனைய மாற்றியமைத்தல்கள் புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான விண்ணப்ப பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்ள எவ்வளவு காலம் செல்லும்?
2 மணித்தியாலங்கள் புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான கட்டணம் யாது? கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும். எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு? கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், மாற்றுதல் மற்றும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் போன்றவற்றுக்காக சரிவர பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள விதத்தில் அவசியமான ஆவணங்களை நிழற்பிரதிகளுடன் ஒப்படைத்தல் வேண்டும். கவனிக்க - மூலப்பிரதிகளுடன் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
|