| இலங்கைப் பிசாவுரிமைக்கான விசேட ஏற்பாடுகள் |
|
இலங்கைப் பிரசைகளாகப் பதிவு செய்தல், இலங்கையின் இரட்டைப் பிரசைகளாகப் பதிவு செய்தல் அல்லது உங்களின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளை / பிள்ளைகளைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் பிரசாவுரிமை பிரிவினால் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் பிரசாவுரிமைப் பிரிவில் (2வது மாடி) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சேவைகள் வழங்கப்படும் நேரங்கள் : பொது விடுமுறைத் தினங்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் இலங்கைக்கு வெளியிலான குழந்தைப் பிறப்பினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 02.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இலங்கைப் பிரசாவுரிமைக்கான விசேட ஏற்பாடுகள்
இந்திய - இலங்கை பிரசைகள் பிரிவினால் இந்திய வம்சாவளியினருக்கும் சீன வம்சாவளியினருக்கும் இலங்கைப் பிரசைகளாகப் பதிவு செய்யும் சேவைகள் வழங்கப்படுகின்றன.குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்து - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவினால் இவ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சேவைகள் வழங்கப்படும் நேரங்கள் : பொது விடுமுறைத் தினங்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் பிரசாவுரிமைப் பதிவுக்காக விண்ணப்பங்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 02.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். |