www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் பிரசாவுரிமை விசேட ஏற்பாடுகள்
விசேட ஏற்பாடுகள்
இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குதல்
1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கமுடைய சட்டங்களின் கீழ் அவர்களின் கோரிக்கையின் பேரில் பிரசாவுரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமாக இந்திய வம்சாவளியினருக்கு சான்றிதழ்களை விநியோகித்தல்.

இந்த வகைப்படுத்தலின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமையைக் கோருவதற்கான தகைமைகள் உள்ளனவா?
குடியுரிமைச் சட்டம் விதிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக (1948.11.15) நீங்கள் இலங்கையில் வசித்துவந்த இந்திய வம்சாவளியாயின் அல்லது அத்தகைய ஒருவரின் வழித்தோன்றல் ஆயின் இந்த வகைப்படுத்தலின் கீழ் நீங்கள் இலங்கைப் பிரசாவுரிமையைக் கோரலாம்.

எவ்வாறு விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது?
  1. குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையக இந்திய - இலங்கை பிரசாவுரிமைப் பிரிவு, 4ம் மாடி, இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்த, கொழும்பு 10.
  2. விண்ணப்பப் பத்திரத்தின் அச்சுப் பிரதியை பதிவிறக்கம் செய்ய இங்கே சுடக்குக.

விண்ணப்ப இல.

விபரம்

IC/C/SPA
1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரசாவுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் பத்திரம்.
C/P/I/O/2003/01
2003 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரசாவுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் பத்திரம்.
C/P/I/O/2003/02
2003 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 02 வது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கையராவதற்காக இந்தியக் கடவுச்சீட்டினைக் கொண்டுள்ளவர்கள் செய்த விசேட வெளிப்பாடு.

விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுத்தல்கள்

  1. 1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் பிரகாரம் விண்ணப்பப் பத்திரம் (1988 / 01 ஆம் இலக்க வழிகாட்டியைப் பார்க்கவும்)
  2. 2003 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் பிரகாரம் விண்ணப்பப் பத்திரம் (2003 / 01 ஆம் இலக்க வழிகாட்டியைப் பார்க்கவும்)
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையக இந்திய - இலங்கை பிரசாவுரிமைப் பிரிவு, 4ம் மாடி, இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்த, கொழும்பு 10.

விண்ணப்பப் பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  1. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று.
  2. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று (இருப்பின்).
  3. விண்ணப்பதாரியின் விவாகச் சான்றிதழின் பிரதியொன்று (இருப்பின்).
  4. விண்ணப்பதாரியின் பெற்றோரது பிரசாவுரிமைப் சான்றிதழின் பிரதியொன்று (இருப்பின்).
பிறப்புச் சான்றிதழும் விவாகச் சான்றிதழும் இல்லாத சந்தர்ப்பங்களில் பின்வரும் ஆவணங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
  1. விண்ணப்பதாரியின் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழொன்று.
  2. விண்ணப்பதாரியின் பிறப்பினையும் விவாகத்தையும் உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசி.
இந்தியக் கடவுச்சீட்டினை மாத்திரம் கொண்டுள்ளவர்களுக்கு அவசியமான மேலதிக ஆவணங்கள்
  1. 2003 இன் 39 ஆம் இலக்க சட்டத்தின் 02 வது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட அறிவித்தல் கடிதம்.
  2. விண்ணப்பதாரியின் அண்மையில் எடுக்கப்பட்ட இந்திய கடவுச்சீட்டின் தெளிவான பிரதியொன்று
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை எவ்வாறு ஒப்படைக்கலாம்?
இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்தை கொழும்பு 10 இல் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவுக்கு கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை.

பிரசாவுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் தேவைப்படும்?
  1. சட்டத்திற்கிணங்க விண்ணப்பப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட தினத்தில் இருந்து 60 சேவை நாட்களில்.
  2. அறிவுறுத்தல்களின் பிரகாரம் விண்ணப்பப் பத்திரத்தை வெற்றிகரமாக ஒப்படைத்திருப்பின் பிரசாவுரிமைச் சான்றிதழ் 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இந்த பிரசாவுரிமை வகைப்படுத்தலுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் யாவை?
  1. 1988 இன் 39 ஆம் இலக்க சட்டம் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கிணங்க நாடற்றோருக்கு பிரசாவுரிமை வழங்குதல்.
  2. 2003 இன் 35 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கிணங்க இந்திய பிரசாவுரிமை உள்ளோருக்கு பிரசாவுரிமை வழங்குதல்.
  3. 2003 இன் 35 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரிவு 02 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்திய கடவுச்சீட்டு உரியவர்களுக்கான அறிவித்தல் கடிதங்களை விநியோகித்தல்.

சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குதல்
சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குவதற்கான 2008 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்கமுடைய சட்டம் 2008.10.31 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரத்தக்கதாக இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் அமுலில் இருந்த பிரசாவுரிமைச் சட்டங்கள் மூலமாக இலங்கைப் பிரசாவுரிமையைப் பெறாத 1948.11.15 ஆம் திகதியில் இருந்து இலங்கையில் வசிக்கின்ற சீன வம்சாவளியினருக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் இதன் கீழ் இலங்கைப் பிரசாவுரிமைக்காக விண்ணப்பிக்க உரிமையுண்டு.
குறிப்பு: இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திகதியில் இருந்து ஐந்து வருடகாலம் வலுவில் இருக்கும். எனவே தகைமை கொண்ட அத்தனை பேரும் இத்தருணத்திலேயே இலங்கைப் பிரசாவுரிமைக்காக விண்ணப்பிக்குமாறு தயவுடன் அறிவிக்கப்படுகிறார்கள்.
எவரால் விண்ணப்பிக்க முடியும்?
சீன வம்சாவளியினரான எவருக்கும்.
  1. 1948 நவம்பர் 15 இல் இருந்து இலங்கையில் நிரந்தரமாக வசித்தவர்.
  2. 1948 நவம்பர் 15 இல் இருந்து இலங்கையில் நிரந்தரமாக வசித்த ஒருவரின் வழித்தோன்றலாக தற்போது இலங்கையில் வசிப்பவர்.
விண்ணப்பிப்பது எவ்வாறு?
விண்ணப்பிக்கும் வேளையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியாக விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் வேளையில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் பெற்றோரில் ஒருவரது விண்ணப்பப் பத்திரம் மூலமாக விண்ணப்பித்தல் வேண்டும். குடும்பமொன்றின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒரே தடவையில் விண்ணப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வது எப்படி?
  1. குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவு, இல. 4ம் மாடி, இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்த, கொழும்பு 10.
  2. விண்ணப்பப் பத்திரத்தின் அச்சுப் பிரதியொன்றை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு இங்கே சுடக்கவும்.
விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கக்கூடிய இடங்கள்
குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவு, 4ம் மாடி, இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்த, கொழும்பு 10.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
தயவு செய்து கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் மூலப் பிரதிகளை அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பிக்கவும். (மூலப் பிரதிகள் மீண்டும் ஒப்படைக்கப்படும்.)
  • பிறப்புச் சான்றிதழ்
  • விவாகச் சான்றிதழ் (விவாகமானவர் எனில்)
  • பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்
  • தேசிய அடையாள அட்டை (இருப்பின்)
மேற்படி ஆவணங்கள் இல்லாவிடின் சமர்ப்பிக்கக்கூடிய மாற்று ஆவணங்கள் யாவை?
மேற்படி ஆவணங்கள் இல்லாவிடின் உங்களின் இலங்கை வதிவினை உறுதிப்படுத்துவதற்காக கல்விச் சான்றிதழ்கள், சாரதி அனுமதிப் பத்திரம் போன்ற பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
 
api_wenu_api

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Mattala Rajapaksa International Airport (MRIA)

The country’s 2nd International Airport, Mattala Rajapaksa International Airport commenced operation with the landing of a Sri Lankan flight with president onboard.

The Department of Immigration & Emigration too took all necessary steps to fulfill Immigration & Emigration formalities at MRIA.

 


 
FUTUREGOV AWARDS CELEBRATE GOVERNMENT ICT ACHIEVEMENTS

The sixth annual FutureGov Awards ceremony was held on 19 October 2012, on the final day of FutureGov Summit in Chiang Mai, Thailand. These technology awards are given each year to government, education or healthcare organisations to recognise and celebrate the most successful modernisation programmes in the region.

Read more...
 
Sri Lankan Passports fees and Validity Period for Minors

With effect from 01st of September 2012, fees and validity period of new passports for Minor Children, below 16 years of age

Read more...
 
Dual Citizenship

The Department of Immigration and Emigration highly appreciate the applicants who applied the dual citizenship with concentration on delivering their valuable commitment to Sri Lanka.

Due to the suspension of awarding dual citizenship temporarily, it is unable to proceed some received applications.

However, the department would like to inform the applicants who did not receive the certificates will be considered under the new scheme. (The  new scheme will be introduced end of this year.)


 
Migrant Accommodating Center

The Department of Immigration and Emigration has been maintaining its Migrant accommodating center for accommodating foreign nationals who violate visa conditions in Sri Lanka since 1987.

Read more...
 
Location