| வதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம் |
|
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை வதிவிட வீசாவினை எவர் பெறலாம்? வதிவிட விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டமானது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழில்வாண்மையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஊக்குவிப்புப் பொதியின் ஒரு பகுதியாகும்
அமுலாக்கும் முகவராண்மை என்றால் என்ன? வதிவிட விருந்தினர் வீசா நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கல் முகவராண்மை என்பது அரசாங்க நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். அமுலாக்கும் முகவராண்மையின் அலுவலகம் இலங்கை, இலக்கம் 41, ஆனந்த ராஜகருணா மாவத்த, கொழும்பு 10 இல் உள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை வீசாவுக்காக எவ்வாறு விண்ணப்பிப்பது? வதியும் விருந்தினர் திட்டத்தின் கதவுகள் வெளிநாட்டவர் அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக, கலாசார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய எந்தவொரு முதலீட்டாளரும் / தொழில்வாண்மையாளரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். வதியும் வீசா விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
வெற்றிகரகமான விண்ணப்பதாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு தோற்றி மருத்துவச் சான்றிழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எனக்கு வீசா கிடைத்தால் எனது குடும்ப அங்கத்தவர்களையும் நான் வரும்போது அழைத்துவர முடியுமா? இயலும். நீங்கள் தகைமைபெற்ற முதலீட்டாளராக அல்லது தொழில்வாண்மையாளராக இருப்பின் உங்கள் வாழ்க்கைத்துணை, தங்கிவாழும் பிள்ளைகள், உங்களின் பெற்றோர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையின் பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துவரலாம். எடுத்துவரக்கூடிய பணத்திற்கான வரையறை யாது? முதலீட்டு வகையினம் இத்திட்டத்தின் கீழ் இந்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளரொருவர் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர் அல்லது மாற்றக்கூடிய அத்தொகைக்கு இணையான வெளிநாட்டு பணத்தைக் கொண்டுவந்து இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ள எந்தவொரு வணிக வங்கியிலும் விசேட கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும். வேறொரு வெளிநாட்டுத் தரப்பினருடன் அல்லது தரப்பினர்களுடன் இணைந்து ஏதேனும் முதலீட்டுக் கருத்திட்டத்தை ஆரம்பிக்க முதலீட்டாளர் எதிர்பார்ப்பின் அத்தகைய ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர்களை அல்லது மாற்றக்கூடிய அத்தொகைக்கு இணையான வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளருடன் வருகை தருகின்ற ஒவ்வொரு தங்கிவாழ்பவர் தொடர்பாகவும் 35,000 அமெரிக்க டொலர்கள் வீதம் மேலதிக பணத்தொகையை முதலீடு செய்தல் வேண்டும். பாவனைக்கு எடுக்காமல் எஞ்சியுள்ள வைப்புத் தொகைக்காக காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்த அளவிலான வட்டி செலுத்தப்படும். இலங்கைக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டமையை உறுதிப்படுத்துகின்ற எழுத்திலான சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். ஆரம்ப முதலீட்டுக்கு மேலதிகமாக முதலீட்டாளர் தனதும் தன்னில் தங்கிவாழ்வோரும் வாழ்க்கைக்குப் போதுமான அளவு நிதியங்களைக் கொண்டுவர வேண்டும்.
தொழில்வாண்மை வகையினம் இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வதியக் கருதியுள்ள தொழில்வாண்மையாளர் குறைந்த பட்சம் 2,000 அமெரிக்க டொலர்களையும் தன்னில் தங்கிவாழ்வோருக்காக ஒருவருக்கு 1,000 அமெரிக்க டொலர்கள் வீதமும் மாதந்தோறும் வாழ்க்கைச் செலவுக்காக இலங்கையில் விசேட வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும். முதலீடு எவரேனும் வெளிநாட்டு முதலீட்டாளரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற நிதியங்கள் ஏதேனும் கருத்திட்டத்தில் முதலீடு செய்யப்படல் வேண்டும். இலங்கையில் வதியும் முதல் இரண்டு வருடங்களில் இந்நாட்டில் முதலீடு செய்தல் தொடர்பில் திருப்திகரமான முன்னேற்றத்தை வெளிக்காட்டாவிட்டால் அந்த முதலீட்டாளரது விசேட கணக்கில் நிலவும் வரவு மீதிக்காக தொடர்ந்தும் வட்டி செலுத்தப்படுவதை நிறுத்திவிட அமுலாக்கும் முகவராண்மையால் இயலும். இத்திட்டத்தின் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களாவன,
விசேட கணக்குகள்
கீழே விபரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கையின் எந்தவொரு வணிக வங்கியிலும் தனித்தனியாக இரண்டு விசேட கணக்குகளை ஆரம்பிக்க இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
1. வதியும் விருந்தினர் வெளிநாட்டு நாணயக் கணக்கு
மூலதன வருமானத்தை தாயகத்திற்கு திருப்பி அனுப்புதல்
தற்போது அமுலில் உள்ள செலாவணிக் கட்டுப்பாடு மற்றும் வரி ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டதாக கீழே குறிப்பிடப்பட்ட வெளிவாரி செலுத்துதல்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
எனது வதியும் விருந்தினர் திட்டம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வதியும் வீசா கட்டணத்திற்கும் வரித் தொகைகளுக்கும் மேலதிகமாக 25 டொலர்கள் அல்லது அதற்கு இணையான மாற்றக்கூடிய நாணயத்தை அமுலாக்கும் முகவராண்மைக்குச் செலுத்த வேண்டும். வீசா கட்டணம் தொடர்பான விபரங்களுக்காக இங்கே சுடக்குக. வதியும் விருந்தினர்களின் பொறுப்புக்கள் வதியும் விருந்தினர்களால் பின்வரும் கருமங்கள் ஈடேற்றப்படல் வேண்டும்.
இலங்கைப் பிரசாவுரிமையைப் பெறக் கருதுகின்ற வதியும் விருந்தினரொருவர் மூன்று வருட கால வதிவினை பூர்த்தி செய்த பின்னர் அதன் பொருட்டு தனது விண்ணப்பப் பத்திரத்தை அமுலாக்கும் முகவராண்மையிடம் சமர்ப்பிக்க வேண்டும். குடியமர்ந்திருந்த காலப் பகுதியில் இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக, கலாசார மேம்பாட்டுக்கும் விண்ணப்பதாரியிடமிருந்து கிடைத்துள்ள பங்களிப்பின் அடிப்படையிலேயே பிரசாவுரிமை வழங்குதல் தொடர்பில் கவனஞ் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்பப் பத்திரத்தை அமுலாக்கும் முகவராண்மையிடமிருந்து (SLI&E) பெற்றுக்கொள்க. அல்லது www.immigration.gov.lk. இல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. விண்ணப்பப் பத்திரத்தை செயல்முறைக்குட்படுத்துவதற்கான கட்டணத்தை குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளரின் பெயருக்கு வரையப்பட்ட காசோலை / வங்கிக் கட்டளை மூலமாக செலுத்தலாம். வதியும் விருந்தினர் வீசா பெறுவதற்கான தகைமைகள் யாவை? வதியும் விருந்தினர் வீசா திட்டம் வெளிநாட்டவர் அனைவருக்குமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் / தொழில்வாண்மையாளரும் இத்திட்டத்தின் கீழ் வீசா கோரலாம். நான் வதியும் விருந்தினர் திட்டத்திற்கான வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
உங்கள் விண்ணப்பப் பத்திரத்தை நான்கு பிரதிகளைக் கொண்டதாக தயாரித்து அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைக்கவும். நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இலங்கைத் தூதரகமொன்று கிடையாது. அப்படியானால் நான் என்ன செய்வது? உங்களுக்காக இலங்கையில் உள்ள (நண்பர், உறவினர் அல்லது பயண முகவர்) எவரையேனும் கொண்டு அதனைச் செய்விக்கவும். எனது வதியும் விருந்தினர் திட்ட வீசா அனுமதிப் பத்திரத்தின் உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் யாது? உங்கள் வதியும் விருந்தினர் திட்ட வீசா ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். வதியும் விருந்தினர் திட்ட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? வதியும் விருந்தினர் திட்ட வீசா நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்கள் அனைத்தையும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னர் வீசா அனுமதிப்பத்திரத்தை நீடிக்கும் பொருட்டு விண்ணப்பித்தவிடத்து கருத்திட்டங்களில் முதலீடு செய்தல் / வங்கிக் கூற்றுகள் போன்ற ஆவணங்களை அவ்விடயங்களை நிரூபிக்கும் பொருட்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். வரி செலுத்துப்பட்டுள்ளமைக்கான உண்ணாட்டரசிறைத் திணைக்களத்திமிருந்து பெறப்பட்ட ஆவணச் சான்றுகளையும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பாக முதலீட்டுச் சபையிடமிருந்து வழங்கப்பட்ட விதப்புரைகளையும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வதியும் விருந்தினர் வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதும் காலம் முடிவடைதல் வேண்டும். |