எனது கனவு இல்லம் வீசா நிகழ்ச்சித்திட்டம் |
இலங்கையில் குடியமர்ந்து நீண்டகாலம் கழிக்கக் கருதியுள்ள மூத்த வெளிநாட்டவர்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளது.
கனவு இல்ல வீசா என்றால் என்ன? இலங்கையில் எனது கனவு இல்லம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வீசாவாகும். நான் ஏன் இலங்கையின் எனது கனவு இல்ல நிகழ்ச்சித்திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும்?
ஏற்புடையதான நியதிகளும் நிபந்தனைகளும் யாவை?
விண்ணப்பப் பத்திரங்கள் கொழும்பு இல் உள்ள குடிவரவு - குடியகல்வுச் திணைக்களத்தில் மாத்திரமே பொறுப்பேற்கப்பட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எனது வதியும் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெறுவது?
மிகவும் அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் நீங்கள் கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கலாம். எனது கனவு இல்ல வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை? வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இலங்கைத் தூதரகமொன்று கிடையாது. நான் என்ன செய்வது? உங்களுக்காக வீசா விண்ணப்பிக்க இலங்கையில் (நண்பர், உறவினர் அல்லது பிரயாண முகவர்) உள்ள ஒருவரை ஈடுபடுத்தலாம். எனது கனவு இல்ல வீசாவின் உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்கள் சுற்றுலா வீசா தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் தங்கியிருக்க செல்லுபடியாகும். காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னராக நீங்கள் புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். நான் எனது கனவு இல்ல வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? எல்லாவிதமான வீசா நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களையும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும். கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெறலாம்?
எனது கனவு இல்ல வீசா தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். இடைத்தங்கல் வீசா இடைத்தங்கல் வீசா என்றால் என்ன? இடைத்தங்கல் வீசா என்பது அச்சொற்றொடரில் கூறுவதைப் போன்ற வெளிநாட்டவரொருவர் பிறிதொரு நாட்டுக்குச் செல்கின்ற வேளையில் தற்செயலாக குறுகிய காலத்திற்காக இலங்கைக்குள்ளே வருவதற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். ' A' அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையில் பிரவேசிக்கும் விமான நிலையத்தில் புறக்குறிப்பு இடப்படும். ஏனையோர் இடைத்தங்கல் வீசா அனுமதிப் பத்திரத்தை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான தகைமைகள் யாவை? இலங்கையூடாக வேறொருநாட்டுக்குச் செல்லும் எந்தவொரு வெளிநாட்டவராகவும் அமைதல் இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான ஒரேயொரு தகைமையாகும். பிறிதொரு நாட்டுக்கு தொடரறாமல் செல்கின்ற வேளையில் இலங்கையில் பிரவேசித்து அதே கலத்தில் அல்லது விமானத்தில் பயணிக்கும் பயணி இடைத்தங்கல் வீசா பெற வேண்டிய அவசியம் கிடையாது. விமானக் கம்பெனியொன்று ஆளொருவரையோ ஆட்களையோ நாட்டுக்கு கொண்டுவந்து அடுத்த விமானத்தில் ஏற்றிச் செல்லுமாயினும் அவ்வாறு வந்தவர்களின் பெயர்ப் பட்டியலொன்றைச் சமர்ப்பிக்குமாயின் அத்தகைய பயணிகளுக்கு இடைத்தங்கல் வீசா அவசியமில்லை.
அத்தகைய வேளைகளில் வருகைதரல் கூடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அலுவலரால் அப்பயணிகளின் கடவுச்சீட்டுகள் தடுத்துவைக்கப்பட்டு வெளிச்செல்லல் கூடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவதோடு அவர் அப்பயணிகள் திரும்பிச் செல்லும் போது அவர்களிடம் கடவுச்சீட்டுகளை மீள ஒப்படைப்பார்.
இவ்வசதி பொதுவான வழமையாக வழங்கப்படுவதில்லையென்பதோடு சம்பந்தப்பட்ட விமானக் கம்பெனியால் அதற்கான விசேட கோரிக்கை விடுக்கப்பட்டு குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளரது அனுமதி பெறப்படல் வேண்டும்.
இலங்கைக்குள் பிரவேசிக்க முன்வீசா கோருகின்ற பயணிகளுக்கே இந்த நடைமுறை ஏற்புடையது. முன்வீசா அவசியமற்ற பயணிகளுக்கு அடுத்து அவர்கள் பயணஞ் செய்யும் விமானத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும். இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை நான் எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் நீங்கள் சுற்றுலா விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். எனது இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? இடைத்தங்கல வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை? வீசா கட்டணங்கள் இருவயினொத்த அடிப்படையிலேயே அறவிடப்படும். அட்டவணை 'B' இல் காட்டப்பட்டுள்ள வருகைதரல் வீசா கட்டணங்களை ஒத்ததாகவே இடைத்தங்கல் வீசா கட்டணங்களும் அமையும். இடைத்தங்கல் வீசாவுக்கான உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்கான இடைத்தங்கல் வீசா வழங்கப்படும். இடைத்தங்கல் வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? அனைத்துவிதமான வீசாக்களின் கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும். நியதிச் சட்டமுறையான அதிகபட்ச காலப்பகுதியிலான ஒரு மாத காலத்தைப் பார்க்கிலும் குறைந்த காலப்பகுதிக்காக இடைத்தங்கல் வீசாவொன்று விநியோகிக்கப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருப்பின் அதன் கால நீடிப்பினை மறுப்பதற்கான காரணமேதும் கிடையாது. இடைத்தங்கல் வீசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுதும் காலம் நிறைவடைய வேண்டும். |
Information with regard to applying for ETA
Suspension of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak Country wise Details
Head Office and all our regional offices are open from 09/11/2020 for public services. You must make an appointment.
Appointments are open now......
Extension of Sri Lankan Visa
New Procedure for Visa Exempted Countries
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS
IMPORTANT NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Instructions to Registered Photo Studio Owners when sending photos online
* Presidential Secretariat of Sri Lanka
* President's Media Division News
* வெளிவிவகார அமைச்சு
* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்
* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்