www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம்
இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு

இலங்கையில் பொதுவான கடவுச்சீட்டானது, கீழ்க் காட்டப்பட்டவாறு 02 தொகுதிகளின் கீழ் விநியோகிக்கப்படுகின்றது.

  1. எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
  2. குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு. (இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவுகள் குடியரசு, ஈரான், லெபனான், ஈராக், சிரியா, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், குவைத், கட்டார், பஹ்ரேன், யெமன்).

சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் புதிய தர நிர்ணயங்களுக்கு அமைய,  e-கடவுச்சீட்டொன்றை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். இப் பணிகளைப் பூர்த்தி செய்து புதிய e-கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு மேலும் ஒருவருட காலம் எடுக்கும்.

இதனிடையே, தற்சமயம் திணைக்களம் வசமுள்ள “எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும்” வெற்றுக் கடவுச்சீட்டு இருப்பில் பற்றாக்குறையொன்று நிலவுவதுடன், ஒருசில தவிர்க்க முடியாத காரணிகள் காரணமாக எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும் “N” தொகுதியைச் சேர்ந்த கடவுச்சீட்டுகளுக்கான தருவித்தற் கட்டளையில் சற்றுத் தாமதமொன்று காணப்படுகின்றது.

குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் வெற்றுக் கடவுச்சீட்டு இருப்புகள் போதிய அளவில் இருப்பதால், 2018.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு மறு அறிவித்தல் செய்யப்படும் வரை, Added All Countries (எல்லா நாடுகளும் உட்சேர்க்கப்பட்டுள்ளது) எனப் புறக்குறிப்பு இட்டு, குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியான கடவுச்சீட்டுகளை, எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும் வித த்தில் விநியோகிப்பதற்காக கொள்கைத் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.

Added All Countries (எல்லா நாடுகளும் உட்சேர்க்கப்பட்டுள்ளது) எனப் புறக்குறிப்பு இடப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள் N7735001 தொடக்கம் N7835000 வரையான தொடர் இலக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இப் புறக் குறிப்பு கடவுச்சீட்டின் பக்க இல. 03 இல் கீழ்ப் பகுதியில் மையமாக இருக்கும் விதத்தில் சிவப்பு நிற மையினால் இடப்பட்டிருக்கும் என்பதுடன், பக்க இல. 04 இல் கருப்பு நிற மையினால் விசேட புறக்குறிப்பொன்று இடப்பட்டிருக்கும்

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Foreign Nationals are not allowed to enter Sri Lanka until 07.04.2020, 2359hrs

All types of Visas already granted to all foreign nationals and not arrived to Sri Lanka yet, have been temporarily suspended. They will not be allowed to enter Sri Lanka until 07.04.2020, 2359hrs (Local time in Sri Lanka)


 
Suspension of issuence of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak

All types of Visa issuance to enter Sri Lanka for all countries have been temporarily suspended


 
Extension of Sri Lankan Visa due to spread of COVID-19 virus

Due to the spread of the COVID-19 virus in the country, the validity period of all types of Visas issued to all foreigners who are currently residing in Sri Lanka have been further extended untill 12th May 2020.





 

Location