www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் தரவிறக்கங்கள் Immigrants and Emigrants Act and Amendments
வதிவிட வீசா விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

2019 யூன் 03 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, வதிவிட வீசா விண்ணப்பங்களை (முதற் தடவையாக/ புதுப்பித்தல்) குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு முன்பதாக, சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டுமென எல்லா வதிவிட வீசா விண்ணப்பதாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேற்சொன்ன சுகாதார பாதுகாப்புத் திட்டத்திலிருந்து விடுவிக்கப்படுகின்ற வகுதியினர் வருமாறு:

 

  1. இராஜதந்திர கடவுச்சீட்டுகளை உடைய விண்ணப்பதாரிகளும், அவர்களில் தங்கி வாழ்வோரும்.

  2. வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களுக்கு இணைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளும், அவர்களில் தங்கி வாழ்வோரும்.

  3. USAID, KOICA, JAICA ஆகிய நிறுவனங்களுக்கும், US Peace Corps படைப் பிரிவிற்கும் இணைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளும், அவர்களில் தங்கி வாழ்வோரும்.

  4. அரச அமைச்சுகள்/ திணைக்களங்கள்/ முகவர் நிறுவனங்களுக்கும், கருத்திட்டங்களுக்கும் இணைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளும், அவர்களில் தங்கி வாழ்வோரும்.

  5. அரசாங்க கருத்திட்டங்களில் ஆலோசகர்களாக சேவையில் ஈடுபட்டுள்ள விண்ணப்பதாரிகள்.

மேலதிக விபரங்களுக்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

www.health.gov.lk/IHU