www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் தரவிறக்கங்கள் செயலாற்றுகை அறிக்கை
பெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்

சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா நோக்கத்திற்காக பெயர் குறிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற கீழ்க் காணும் பட்டியிலில் காட்டப்பட்ட நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டை உடையோர்கள், 2020.02.26 தொடக்கம் 2020.04.30 வரையிலான காலப்பகுதிக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்திலிருந்து (30 நாட்களுக்கு ஏற்புடையதாகும்) விலக்களிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், குறுகிய காலப்பகுதிக்கு இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்கள், இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது முகங் கொடுக்க நேரிடுகின்ற அநாவசிய தாமதங்களை தவிர்க்கும் வகையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் பூர்வ அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கும், மேம்படுத்தப்பட்ட பூர்வ தீர்த்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

பட்டியல்படுத்தப்பட்ட நாடுகள் வருமாறு:

 

  • தாய்லாந்து
  • ஐரோப்பிய சங்கத்தைச் சேர்ந்த 28 நாடுகள்

(ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்திவியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மோல்டா, நோர்வே, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலோவாக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின் மற்றும் சுவீடன்)

  • ஐக்கிய அமெரிக்கா
  • ஐக்கிய இராச்சியம்
  • ஜப்பான்
  • அவுஸ்திரேலியா
  • தென் கொரியா
  • கனடா
  • சிங்கப்பூர்
  • நியுசீலாந்து
  • மலேசியா
  • சுவிச்சர்லாந்து
  • கம்போடியா
  • சீனா
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • இஸ்ரவேல்
  • உக்ரேன்
  • பிலிப்பைன்ஸ்
  • ரஷ்யா
  • ஐஸ்லாந்து
 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Foreign Nationals are not allowed to enter Sri Lanka until further notice

All types of Visas already granted to all foreign nationals and not arrived to Sri Lanka yet, have been temporarily suspended. They will not be allowed to enter Sri Lanka until further notice.


 
Suspension of issuance of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak

All types of Visa issuance to enter Sri Lanka for all countries have been temporarily suspended


 

Location