குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்நோக்கு மற்றும்   செயற்பணி

எமது நோக்கு

பிராந்தியத்தின் மிகச் சிறந்த குடிவரவு மற்றும் குடியகல்வுச் சேவையாக திகழ்தல்.

 

எமது செயற்பணி

தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கைப் பேணிய வண்ணம் பொருளாதார அபிவிருத்திக்கான வசதியை ஏற்படுத்தி நாட்டிலிருந்து வெளிச்செல்வோரையும் நாட்டுக்குள் வருவோரையும் கண்காணித்தல் மற்றும் பிரசாவுரிமை சேவைகளை வழங்குதல்.

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகள்

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பின்வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

 • இலங்கைப் பிரசைகள் அல்லாத வேறு ஆட்கள் இலங்கையினுள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தல்.
 • இலங்கைப் பிரசைகள் மற்றும் இலங்கையரல்லாதோர் இலங்கையிலிருந்து வெளிச் செல்வதை ஒழுங்குபடுத்தல்.
 • இலங்கைப் பிரசைகளல்லாத இலங்கையில் வசிப்பதற்கு தகுதியற்ற வெளிநாட்டவர்களை இலங்கையிலிருந்து வெறியேற்றுதல்.
 • மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய வேறு விடயங்கள் தொடர்பில் ஏற்பாடுகளை வகுத்தல்.

1949.11.01 ஆம் திகதியில் இருந்து குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்க குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது.

அதிகாரங்கள்

சட்டத்தின் 4 வது பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டாளருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் மூலமாக அல்லது சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள, விதிக்கப்பட்டுள்ள அல்லது கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள், செயற்பாடுகளை அமுலாக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் 2 வது பிரிவு அல்லது 31 வது பிரிவு அல்லது 52 வது பிரிவு மூலமாக அளிக்கப்பட்டுள்ள தத்துவங்கள் அமைச்சராலேயே அமுலாக்கப்படல் வேண்டும். (சட்டத்தின் 4, 5, 6 மற்றும் 7 வது பிரிவுகளைப் பார்க்கவும் / நிருவாக ரீதியான ஏற்பாடுகளுக்கு குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் II வது பகுதியைப் பார்க்கவும்.)

இலங்கயைரல்லாத ஆட்கள் இலங்கையினுள் பிரவேசிப்பது சட்டத்தின் III பகுதியின் எற்பாடுகள் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பிரவேசிக்கும் இறங்கு துறைகள், உட்பிரவேசித்தலின் போது அவசியமான ஆவணங்கள், இலங்கைக்குள்ளே பிரவேசிக்கவும் தங்கியிருக்கவும் அவசியமான வீசா, வருகையின் போது அவசியமான மருத்துவ மற்றும் ஏனைய பரிசோதனைகள், ஆட்கள் மற்றும் அவர்களின் பொருட்கள் போன்றவற்றை பரிசோதித்தல், இலங்கையில் தடுத்துவைக்கப்படுகின்ற மற்றும் இலங்கையிலிருந்து அகற்றப்படுகின்ற சில ஆட்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள்இப்பகுதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் IV வது பகுதி மூலமாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக இலங்கையரல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் புரிகின்ற செயற்பாடுகள் பரிசோதிக்கப்படும்.

இலங்கையரல்லாத ஆட்களை அவசியமேற்படுமிடத்து இலங்கையிலிருந்து வெளியேற்றுதல் அல்லது நாடுகடத்துதல் சட்டத்தின் V மற்றும் VI வது பகுதியில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.

சட்டத்தின் VII ஆம் பகுதி மூலமாக ஆட்கள் இலங்கையிலிருந்து வெளியேறுதல் கட்டுப்படுத்தப்படுகின்றது. வெளியேறுவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள இறங்குதுறைகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் அவசியப்பாடு, அதனோடு தொடர்புடைய ஒழுங்குவிதிகளைத் தயாரித்தலுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் இப்பகுதியில் அடங்குகின்றன. இப்பகுதியின் ஏற்பாடுகள் இலங்கைப் பிரசைகளுக்குப் போன்றே வெளிநாட்டவர்களுக்கும் ஏற்புடையதாகும்.

 

கடமைகள்

 • அங்கீகரிக்கப்பட்ட உட்பிரவேசிக்கும் இடங்களில் இலங்கையரல்லாத ஆட்களின் பயண ஆவணங்களில் அவசியத்தின் பிரகாரம் புறக்குறிப்பு இடல். (சட்டத்தின் 11 மற்றும் 13 ஆம் பிரிவுகளைப் பார்க்கவும்.)
 • உட்பிரவேசிக்கும் இடங்களில் இலங்கையரல்லாத ஆட்களின் பதிவேடொன்றினை வைத்திருத்தலும் பேணிவருதலும். (26 வது பிரிவைப் பார்க்கவும்.)
 • வெளிச் செல்லும் இடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறும் ஆட்களின் பயண ஆவணங்களில் முத்திரை பொறித்தல் மற்றும் அது பற்றிய அறிக்கைகளைப் பேணிவரல். (56 ஆவது ஒழுங்கு விதியைப்பார்க்கவும்.)
 • அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறைகளில் இலங்கைக்குள் பிரவேசிக்கின்ற மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறுகின்ற ஆட்களை இனங்காணல். (37ஆவது பிரிவைப் பார்க்கவும்.)

 

செயற்பாடுகள்

 • குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் மூலமாக அல்லது அதன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அமுலாக்குதல்.
 • குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுதல்.
 • இலங்கையரல்லாத ஆட்களுக்கு இலங்கைக்குள்ளே பிரவேசிக்கவும், தங்கியிருக்கவும் வீசா அனுமதி வழங்குதலும், எல்லைகளைக் கட்டுப்படுத்துதலும். (சட்டத்தின் III வது பகுதியைப் பார்க்கவும்.)
 • இலங்கைப் பிரசைகளுக்கு பயண ஆவணங்களை விநியோகித்தல். (சட்டத்தின் VII ஆவது பகுதியைப்  பார்க்கவும்.)
 • அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட தடுத்து வைத்தல் நிலையங்களைப் பேணிவருதல். (48 வது பிரிவைப் பார்க்கவும்.)
 • சட்டத்தின் மூலமாக அல்லது அதன் கீழ் வகுக்கப்பட்ட ஏற்பாடுகள் மீறப்படுகையில் விசாரணை மேற்கொள்ளல்.
 • மேலே குறிப்பிட்ட செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களையும் அறிக்கைகளையும் பேணிவருதலும் பராமரித்தலும்.

 
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

 • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
 • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
 • பத்தரமுல்லை.
 • 1962 / +94 112 101 500
 • +94 011 2885 358
 • controller@Immigration.gov.lk
14349330