இந்திய வம்சாவளியுள்ள ஆட்களை 1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கமுடைய சட்டங்களின் கீழ் அவர்களின் கோரிக்கையின் பேரில் பிரசாவுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை விநியோகித்தல்.
இந்த வகைப்படுத்தலின் கீழ் தாங்களுக்கு இலங்கைப் பிரசாவுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழைக் கோருவதற்கான தகைமைகள் உள்ளனவா?
குடியுரிமைச் சட்டம் விதிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக (1948.11.15) நீங்கள் இலங்கையில் வசித்துவந்த இந்திய வம்சாவளியாயின் அல்லது அத்தகைய ஒருவரின் வழித்தோன்றல் ஆயின் மற்றும் தாங்கள் பரம்பரை வழியாக இலங்கைப் பிரஜையாக இல்லாத போது இந்த வகைப்படுத்தலின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதுஎவ்வாறு?
விண்ணப்ப இல. | விபரம் |
IC/C/SPA | 1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரசாவுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் பத்திரம். |
C/P/I/O/2003/01 | 2003 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரசாவுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் பத்திரம். |
C/P/I/O/2003/02 | 2003 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 02 வது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள இந்தியக் கடவுச்சீட்டினைக் கொண்டுள்ளவர்கள் செய்யவேண்டிய விசேட வெளிப்பாடு. |
விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுத்தல்கள்
விண்ணப்பப் பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பிறப்புச் சான்றிதழும் விவாகச் சான்றிதழும் இல்லாத சந்தர்ப்பங்களில் பின்வரும் ஆவணங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
இந்தியக் கடவுச்சீட்டினை கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் அவசியமான மேலதிக ஆவணங்கள்
பூர்த்தி செய்த விண்ணப்பப்பத்திரங்களை எவ்வாறு ஒப்படைக்கலாம்?
பத்தரமுல்லை, சுபூத்திபுர வீதி "சுஹுறுபாய", கட்டிடத்தில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவுக்கு கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை.
பிரசாவுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் தேவைப்படும்?
இந்த பிரசாவுரிமை வகைப்படுத்தலுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் யாவை?
1948.11.15 ஆம் திகதியில் இருந்து இலங்கையில் வசித்த சீன வம்சாவளியினருக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் பதவின் மூலம் இலங்கையின் பிரசாவுரிமையை வழங்கும் நோக்கில் சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குவதற்கான 2008 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்கமுடைய சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குவதற்கான(விசேட ஏற்பாடுகள்) சட்டம் விதிக்கப்பட்டது. 2008.10.31 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம் அதன் 09 ஆம் பிரவின் பிரகாரம் 05 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அதன்செயல்படும் காலப்பிரிவு 2013.10.30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
எனவே, தற்போது இலங்கையில் வசிக்கும் சீன வம்சாவளி மக்களுக்கு இலங்கையின் பிரஜாவுரிமையை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆயினும், இந்தச் சட்டத்தின் 04 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பதிவின் மூலம் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ள ஒருவருக்கு அல்லது அவர்களின் வழித்தோன்றல்களுக்கு ஏற்புடைய பதிவு தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் அது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.