குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



எம்மைப்  பற்றி
 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் அதற்கு பிற்காலத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய நாட்டினுள் மற்றும்  நாட்டுக்கு வெளியே  நிகழும் முறையற்ற குடிப்பெயர்வுகளை அடையாளம் காணல், தடுத்தல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


நோக்கு
 

“குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான வளமான இலங்கையை கட்டியெழுப்புதல்”

செயற்பணி
 

“நாட்டின் கலாசாரத்தைப் பேணிய வண்ணம் பொருளாதார அபிவிருத்தி மூலம் பாதுகாப்பானதும் வளமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக செயலூக்கத்துடன் மற்றும்  எதிர்தாக்கத்துடன் குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தை வினைத்திறனுடனும்  ஏற்புடையவாறும் அமுல்படுத்தல்”

  1. நோக்கங்கள்
    1. இந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதன் மூலம் குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீறப்படுவதாகக் கருதப்படுகின்ற வெளிநாட்டவர்கள் தொடர்பாக, குறித்த வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர், நாட்டினுள் நுழையும்  போது மற்றும் நாட்டில் நுழைந்த பின்னர்  அடையாளம் காணும்  நோக்கத்துடன் மதிப்பீடு செய்தல்.
    2. குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஏற்பாடுகளை மீறிய வண்ணம் இந் நாட்டில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களை இனங் கண்டு அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபடுதல்.
    3. குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் குற்றமொன்றைச் செய்வதற்கு உடந்தையாக இருக்கும் ஆட்கள் தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தல்.
    4. மனித வியாபாரம் மற்றும் ஆட்கடத்தல்கள் நடைப்பெறக்கூடிய சந்தர்ப்பங்களை இணங்கண்டு அவற்றை மேலதிக  விசாரணைக்காக முன்வைத்தலும்.
    5. வீசா விநியோகித்தல், நீடித்தல் தொடர்பான சந்தர்ப்பங்களில் புலனாய்வு அறிக்கைகளை வழங்குதல்..
    6. வெளிநாட்டவர்களை நாட்டிலிருந்து  வெளியேற்றல், நாடு கடத்தல், ஆட்களை தடுத்து வைத்தல் மற்றும் வேறு தொடர்புடைய நீதிமன்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்தல்.
    7. புலனாய்வு நடவடிக்கைகளில் எப்போதும் ஏற்புடமையைப்  பேணிவரல்.
    8. சட்டத்தை அமுல் செய்யும் முகவர் நிறுவனங்களுக்கிடையில் கூட்டுச் செயற்பாடுகளை ஊக்குவித்தலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலும்.
       
  2. சட்டங்களும் ஒழுங்குவிதிகளும்
    1. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.
    2. 1955 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1961 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க, 1993 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1988 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, 2006 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, 2015 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க மற்றும் 2021 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள்
    3. தண்டனைச் சட்டக் கோவை.
    4. குற்றவியல் சட்டக் கோவை.
    5. சான்றுக் கட்டளைச் சட்டம்.
    6. 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டம் மற்றும் அதற்கு  செய்யப்பட்டுள்ள திருத்தங்கள்.

அழைப்பு தொடர்பான தகவல்கள்

முகவரி: புலனாய்வுப் பிரிவு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், 6 ஆம் மாடி, “சுஹுறுபாயா” பத்தரமுல்லை.
உடன் அழைப்பு: 011-5749999
தொலைபேசி இல.: 0114199318
மின்னஞ்சல்: acinvestigation@immigration.gov.lk
தொலைநகல் 0112885358

உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ள

கட்டுப்பாட்டாளர் (புலனாய்வு மற்றும்  செயற்படுத்தல்)

  • பெயர்: திரு. எம்.ஜீ.வீ. காரியவசம்
  • அலுவலகத் தொலைபேசி:  0112101564

உதவிக் கட்டுப்பாட்டாளர் (புலனாய்வு)

  • பெயர்: திரு. எஸ்.ஏ.ஜே. பிரசன்ன குமார
  • அலுவலகத் தொலைபேசி:  0112101565


"சரியான வழியில்  வௌிநாடு செல்வோம்"
 

அடிக்கடி கேட்கப்படுகின்ற கேள்விகள்

குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்திற்கு அமைய, தொழிலொன்றை எதிர்பார்க்கும் வெளிநாட்டவரை சட்டரீதியாக சேவையில் ஈடுபடுத்த முடியுமா? என்பதை சேவை பெறுனர் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்
  • முதலாவதாக குறித்த வெளிநாட்டவரிடம் செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருத்தல் வேண்டும்.
  • தொழிலை எதிர்பார்த்திருக்கும் வெளிநாட்டவர் வருகைதரு வீசாவை/ வருகைதரு புறக்குறிப்பைப் பெற்று இலங்கைக்கு வருகை தந்திருத்தல் வேண்டும்.
  • துறைமுகமொன்றினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில், தரித்திருப்பதற்காக வழங்கப்படுகின்ற காலப்பகுதிக்குள் வெளிநாட்டு ஊழியரொருவரினால் வசித்தல் வீசாவுக்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
முடியாது. குறித்த வெளிநாட்டவர் தற்போதைய புதிய நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வசித்தல் வீசாவைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். இங்கு ஒரு நோக்கத்திற்காக மட்டுமே வசித்தல் வீசா வழங்கப்படுகின்றது.
முடியாது. அவ்வாறு செய்வது சட்டரீதியானதல்ல.
குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ், இங்கு தொழில் வழங்குநர் தண்டப் பணமொன்றைச் செலுத்துவதற்கு கட்டுப்படுகின்றார்.
தயவுகூர்ந்து இந்தத் திணைக்களத்தின் வீசா பிரிவை தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவும் தகவல் இணைப்பு
முடியாது. அவ்வாறு செய்வது சட்டரீதியானதல்ல.
முடியாது. அவர் செல்லுபடியான வீசாவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முடியாது. அவர் நாட்டில் தரித்திருப்பதற்காக செல்லுபடியான வீசாவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
14773169