குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்




வெளிநாட்டு விண்ணப்பப்படிவங்கள்

வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்

இலங்கைப் பிரசாவுரிமையைக் கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதரகத்தினூடாக அல்லது உரிய நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாபோது அண்மையிலுள்ள நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.  குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத் தலைமை அலுவலகத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

  1. இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
     
    • மிகச் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தையும் (படிவம் K 35 A), ஏனைய அத்தாட்சிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களையும் இலங்கை வெளிநாட்டுத் தூதரகத்தில்/ கொன்சியுலர் காரியாலயத்தில் ஒப்படைத்தல் வேண்டும்
    • விண்ணப்பதாரியின் பிரகடனம் Client Undertaking Section) உள்ளடக்கப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் K 35 A) திருத்தப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் விண்ணப்பதாரி  கையொப்பமிட்டு தூதரக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் (CUS) அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்  கொள்ளப்படமாட்டாது.
    • கடைப்பிடிக்க வேண்டிய/ கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் பத்திரம் கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை விநியோகிக்கும் போது ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.
    • அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்களை (படிவம் K 35 A), அந்தந்த வெளிநாட்டுத் தூதரகங்கள்/ கொன்சியுலர் காரியாலயங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் மற்றும்  திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
    • கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தைப் Form K 35 A பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (வெளிநாட்டு தூதரகங்கள் ஊடக கடவுச்சீட்டை விண்ணப்பிப்பதற்கு மாத்திரம்)
       

    வெளிநாட்டுத் தூதரக கிளையினூடாக விண்ணப்பிக்கங்களை சமர்ப்பிக்கும் முறை:
    அவசியமான ஆவணங்கள்: தரவிறக்கங்கள் - விண்ணப்பப் பத்திரம் பார்க்கவும்.
    தொடர்புடைய சுற்றறிக்கை : OM/2021/01

  2. 2018 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் இலங்கைக்கு வருகைத்தரும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அவர்களது கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
     
    1. 2018.01.01 ஆம் திகதி தொடக்கம்  புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள்  விமான நிலையங்களூடாக   இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
       

      • விமானப் பயணிகள் குடிவரவு கருமபீடத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.
        அல்லது
        பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் நேரடியாக வருகைத்தரல் வேண்டும்.
      • இதன் போது தனியான தொடர்பிலக்கத்துடன் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) வழங்கப்படும்.
      • உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவத்தில் (BDA Form) இரு பிரதிகளைக் கொண்டதாக கையொப்பமிடுதல் வேண்டும்.
      • அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந்த நபருக்கு வழங்கப்படும்.
      • மற்றைய பிரதி விமான நிலையத்தில் பாதுகாப்பாக பேணப்படும்.

        விமான நிலையத்திலிருந்து  வெளியேறும் போது உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்படவில்லை.
         

    2. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கு வரும்  போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
       
      • உயிர்மானத் தரவுகளை வழங்குவதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது மாத்தறை, கண்டி, வவுனியா, குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றுக்கு வருகைத் தருதல் வேண்டும்.
      • வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்பட்டுள்ள விசேட கருமபீடத்தில் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படும்.
      • உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 30 - 45 நிமிடங்களாகும்.
      • உயிர்மானத் தரவுகளை வழங்கிய நபர்களுக்கு எந் நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும்

தொடர்புடைய சுற்றறிக்கை : DIE/OM/CIR/2017/01

விசாரணைகள்

பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி. டபிள்யு.கே.என். நயோமி
தொலைபேசி : +94 11 2 101522
தொலை நகல் : +94 11 2879213
உதவிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி. கே.பீ.ஜே. பெரேரா
தொலைபேசி : +94 11 2 101523

மின்னஞ்சல் : acom@immigration.gov.lk

விண்ணப்பப்படிவங்களுக்கான கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்,

உதவிச் சேவைகள்

அத்தாட்சிப்படுத்தல் சேவைகள்

கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வது எப்படி?

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை ?

மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும்

இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை ?

பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/- 

மொழிபெயர்ப்புச் சேவை

கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும்.

எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது ?

விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும்.

இச்சேவைக்கான கட்டணம் யாது ?

ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும்.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
27426436