குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



களவாடப்பட்ட அல்லது காணாமற் போன கடவுச்சீட்டு

தங்களுடைய கடவுச்சீட்டு களவாடப்பட்டிருப்பின் அல்லது காணாமற் போயிருப்பின் அது பற்றி உரிய அதிகாரிகளிடம் உடனடியாக அறிவிப்பது உங்களுடைய பொறுப்பாகும். நீங்கள் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் உங்களது காணாமற் போன கடவுச்சீட்டு சட்ட விரோதமான செயல்களுக்கு பயன் படுத்தப்பட்டிருப்பின் நீங்கள் அவற்றிற்கு உதவியும் ஆதரவும் வழங்கியதாக கருதப்படும்.

நீங்கள் இலங்கையில் இருப்பவரெனின்

  1. தங்களுடைய கடவுச்சீட்டு களவாடப்பட்டிருப்பின் அல்லது காணாமற் போயிருப்பின் நீங்கள் அது பற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 011 532 9326 தொலைநகல் 011-2885358 ஊடாக தெரிவிக்கலாம். அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வார நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணி முதல் 4.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
  2. இயன்றளவு துரித கதியில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.
  3. தங்களது முறைப்பாட்டின் விபரங்களை பொலிஸார் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறியத் தருவர்.
  4. பொலிசாரின் மூலமாக தகவல்களைப் பெற்றுக் கொண்ட உடனேயே தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டினை இரத்துச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  5. களவாடப்பட்டதாகஅல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்த முடியாது. கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்ட தகவல் தவறான பிரயோகங்களினைத் தவிர்ப்பதற்காக உலகம் முழுவதும் பகிரப்படும். காணாமற் போன கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம். அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக புதிய கடவுச்சீட்டினை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நீங்கள் வெளிநாடொன்றில் வசிப்பவராயின்

  1. நீங்கள் வசிக்கும் நாட்டில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்து பொலிஸ் அறிக்கையினைப் பெற்றுக் கொள்ளவும்.
  2. காணாமற் போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டுக்கான முறைப்பாட்டு படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  3. முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட முறைப்பாட்டு படிவத்துடன் பொலிஸ் அறிக்கையையும் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது கொன்சியுலர் அலுவலகத்தில் கையளிக்கவும்.
  4. இலங்கைத் தூதரகம் அல்லது கொன்சியுலர் அலுவலகம் தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய தகவல்களை இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறியத் தருவர். அவ்வாறு தகவல்களைப் பெற்றுக் கொண்ட உடனேயே தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டினை இரத்துச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  5. களவாடப்பட்டதாகஅல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்தப்பட முடியாது. கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்ட தகவல் தவறான பிரயோகங்களினைத் தவிர்ப்பதற்காக உலகம் முழுவதும் பகிரப்படும். காணாமற் போன கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம். அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக புதிய கடவுச்சீட்டினை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பிறிதொரு நபரின் தவறவிடப்பட்ட இலங்கைக் கடவுச்சீட்டு தங்களால் கண்டெடுக்கப்படின், தயவு செய்து அதனை உறுதியான கடித உறையில் இட்டு கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தொலைந்து போன / காணாமற் போன கடவுச்சீட்டுகள் பற்றி அறிவிக்கும் பிரிவு.
சர்வதேச ஒத்துழைப்பு அலகு
3 ஆம் மாடி
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
"சுகுறுபாயா",
பத்தரமுல்லை,
இலங்கை

முக்கியமான குறிப்புக்கள்

  1. களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்.
  2. களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக்கப்படுவதினால் தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்தப்பட முடியாது.
  3. களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக தங்களால் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய விபரங்கள் எமது களவாடப்பட்டதாக / காணாமற் போன  கடவுச்சீட்டு பற்றிய எமது தரவுத் தொகுதியில் உள்ளடக்கப்படுவதுடன் அவை சர்வதேச பொலிஸ் ஊடாக உலகம் முழுவதும் பகிரப்படும்.
  4. களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தங்களால் மீண்டும் கண்டெடுக்கப்படின் அதனை மேற்கூறப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவ்வாறு கையளிக்கும் போது தங்களால் கோரப்படுமாயின் இரத்துச் செய்யப்பட்டப் பின் அது மீண்டும் தங்களிடம் கையளிக்கப்படும். அவ்வாறில்லையாயின் அது அழிக்கப்படும்.
  5. களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு மீண்டும் செல்லுபடியானதாக்கப்பட முடியாது.



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
24262043