குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



கடவுச்சீட்டினை விநியோகித்தல்

சாதாரண கடவுச்சீட்டு

அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?

  1. தற்போதுள்ள கடவுச்சீட்டும், தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நிழற் பிரதியும். (விபரங்களுக்கு இங்கு கீழே பார்க்கவும்.)
  2. புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
  3. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
  4. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  5. தேவைப்படும் பட்சத்தில் விவாகச் சான்றிதழின் மூலப் பிரதியும், நிழற் பிரதியும். (விவாகத்தின் பின்னர் பாவிக்கப்படுகின்ற பெயரை உறுதிப்படுத்துவதற்காக)
  6. உங்களது தொழிலை உறுதி செய்வதற்கான தொழிற் தகைமைச் சான்றிதழும், அதன் நிழற் பிரதியும். / கல்வி மற்றும்  சேவைச் சான்றிதழ்.

சங்கைக்குரிய பௌத்த பிக்குகள்:

  • பிக்கு சான்றிதழை (சாமனேர சான்றிதழ்) அல்லது பிக்கு பட்டமளிப்புச் சான்றிதழை (உபசம்பதா சான்றிதழ்) அதன் நிழற் பிரதியுடன் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

* செல்லுபடியான கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவமொன்றைப் பெற்றுக்  கொள்வது எப்படி?

  1. கொழும்பு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
  2. கண்டி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகங்கள்.
  3. உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்திலிருந்து.
  4. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக.
  5. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

விண்ணப்பப் படிவத்தை ஒப்படைக்க வேண்டிய இடம் யாது ?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
  2. கண்டி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகங்கள்.
  3. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில்.

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் செல்லும் ?

சாதாரண அடிப்படையில் - 30 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - அதே தினத்தில்

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை தயாரிப்பதற்கான கட்டணம் யாது ?

சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 10,000.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 20,000.00

 

இராஜதந்திர கடவுச்சீட்டு

கடவுச்சீட்டில் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலேயொழிய, இக்கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான ஆட்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்களுக்காக இக்கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.
"தகைமை பெற்ற ஆட்களின் பெயர்ப் பட்டியலுக்கான சுற்றறிக்கையைப் பார்க்கவும்."

விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் ?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலில்.
  2. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை இங்கு பதிவிறக்கம் செய்க.
  3. கண்டி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை ?

  1. விண்ணப்பதாரியின் மிக அண்மையில் பெறப்பட்ட கடவுச்சீட்டும் தரவுகள் பதியப்பட்ட பக்கத்தின் நிழற் பிரதியும். (தயவுசெய்து விபரங்களுக்காக கீழே பார்க்கவும்.)
  2. புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
  3. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  4. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  5. விவாகச் சான்றிதழின் மூலப் பிரதியும், நிழற் பிரதியும். தேவைக்கேற்ப. (விவாகத்திற்குப் பிந்திய பெயரை உறுதிப்படுத்துவதற்காக.)
  6. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம்.
    • வெளிநாட்டுப் பதவிகளுக்காக - வெளியுறவு அமைச்சின் கோரிக்கைக் கடிதம்.
    • ஏனைய ஆட்களுக்காக - வரிசை அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம்.

* செல்லுபடியான கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ?

கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு.

இராஜதந்திர கடவுச்சீட்டுக்கான தயாரிப்புக் கட்டணம் யாது ?

சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 10,000.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 20,000.00

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்காக எவர் விண்ணப்பிக்கலாம் ?

பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த ஆட்களுக்காக உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்,

  • மாகாண சபை உறுப்பினர்களுக்கு
  • நகர சபைத் தலைவர்களுக்கு
  • உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு
  • நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கு
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் இனங்கண்ட பணியாள் குழாமிற்கு (உரிமைபெறும் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலுக்காக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் 01/2016 ஆம் இலக்க  சுற்றறிக்கையைப் பார்க்கவும்.)

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?

  • கொழும்பு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  • கண்டி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகங்கள்.
  • விண்ணப்பப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்துகொள்க.

விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை ?

  • தற்போது பாவிக்கும் கடவுச்சீட்டும், தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நிழற் பிரதியும். (விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  • அவசியத்திற்கேற்ப விவாகச் சான்றிதழின் மூலப் பிரதியும், நிழற் பிரதியும். (விவாகப் பெயரை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக)
  • மாகாண சபைகள், திணைக்களங்கள், நிரல் அமைச்சுக்களின் தலைமை அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம்.

* செல்லுபடியான கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ?

கொழும்பு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு.

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கான தயாரித்தல் கட்டணம் யாது ?

சாதாரண அடிப்படையில் : இலங்கை ரூபா. 10,000.00
அவசர அடிப்படையில் : இலங்கை ரூபா. 20,000.00

இயந்திரத்தில் வாசிக்க இயலாத கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக பயண ஆவணங்கள் (NMRP)

இந்த ஆவணங்கள் யாவை ?

கடவுச் சீட்டினைத் தொலைத்த அல்லது களவாடப்பட்ட அல்லது வெளிநாட்டில் இருக்கும் போது காலாவதியாகியுள்ள வேளையில் இலங்கையருக்கு விநியோகிக்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

இந்த ஆவணங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?

வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடமிருந்து இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்போது விண்ணப்பிக்கலாம் ?

நீங்கள் மீண்டும் சிலகாலத்திற்கு இலங்கைக்கு திரும்பிவர எதிர்பார்ப்பீர்களாயின் நீங்கள் இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டிற்கு அல்லது தற்காலிக பயண, ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

செல்லுபடியாகும் காலப்பகுதி யாது ?

இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டல்லாத தற்காலிக பயண ஆவணம் இலங்கைக்கு ஒரு தடவை பயணஞ் செய்ய மாத்திரமே செல்லுபடியாகும்.

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?

  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில்.
  • அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்க.

விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது ?

வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒப்படைப்பதன் மூலம்.

அடையாளச் சான்றிதழ் (IC)

அடையாளச் சான்றிதழ் என்றால் என்ன ?

வெளிநாட்டவரொருவரின் கடவுச்சீட்டு தொலைந்து போயுள்ளவிடத்து அல்லது இலங்கையில் இருக்கும் போது காலாவதியானால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

அடையாளச் சான்றிதழைப் பெறுவதெப்படி?

கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ரூ. 3500/- ஐ செலுத்தி அன்றைய தினத்திலேயே அடையாளச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். 

பராயமடையாத விண்ணப்பதாரிகள் / மகவேற்பு விண்ணப்பதாரர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு (3 அல்லது 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு)

பராயமடையாதோர் என்றால் யார் ?

16 வயதுக்கு குறைந்த எந்த ஒருவரும் இதன் பொருட்டு பராயமடையாதோராகக் கருதப்படுவர்.

இலங்கை கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக பராயமடையாத ஒருவர் விண்ணப்பிப்பது எப்படி ?

விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் பொருட்டு விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்கப்படுகின்ற அலுவலகத்திற்கு விண்ணப்பதாரி வரும்போது தமது பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலருடன் வருகைதரல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமொன்று விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை ?

  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • பெற்றோரது கடவுச்சீட்டு (தரவுப் பக்கத்தினதும் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தினதும் நிழற்பிரதிகளுடன்).
  • பெற்றோருக்கு கடவுச்சீட்டு இல்லாவிடின் சத்தியக் கடதாசியுடன் தேசிய அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் நிழற் பிரதியும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • பெற்றோரது விருப்பம் தெரிவிக்கும் கடிதம். (விண்ணப்பதாரி வரும்போது தமது பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலருடன் வருகைதரல் வேண்டும்.)
  • விண்ணப்பதாரியின் தற்போதுள்ள கடவுச்சீட்டும், அதன் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நிழற் பிரதியும்.

மகவேற்புப் பிள்ளைக்காக கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் கீழ்க்காணும் மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.

  • மகவேற்புச் சான்றிதழின் மூலப் பிரதியும், அதன் நிழற் பிரதியும்.
  • அதற்கான நீதிமன்றக் கட்டளை.
  • நன்னடத்தை, சிறுவர் பாதுகாவல் ஆணையாளரது கடிதம்.

முக்கிய குறிப்பு: ஆவணங்களின் நிழற் பிரதிகள் சகிதம் மூலப் பிரதிகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். கீழ்க் காட்டப்பட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

பிள்ளை/ பிள்ளைகள் இலங்கைக்கு வெளியே பிறந்திருப்பின், அந்தந்த பிள்ளைக்காக கொன்சியுலர் அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழும், குடியுரிமையைப் பதிவு செய்த சான்றிதழும். (குடியுரிமையைப் பதிவு செய்யும் போது பணம் செலுத்தியமைக்காக விநியோகிக்கப்பட்ட பற்றுச்சீட்டின் நிழற் பிரதியும் ஏற்றுக் கொள்ளப்படும்).

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் செல்லுபடியான இலங்கைக் கடவுச்சீட்டை/ கடவுச்சீட்டுகளைக் கொண்டில்லையெனில், அதனை உறுதிப்படுத்துவதற்கான சத்தியக் கடதாசியும், பெற்றோரின் தேசிய அடையாள அட்டையும்.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் காலஞ் சென்றிருப்பின் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள், சட்ட ரீதியான பாதுகாவலரை அடையாளப்படுத்துவதற்கான ஆவணம், சட்ட ரீதியான பாதுகாவலரின் விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம், பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருப்பின் குறித்த வெளிநாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பெற்றோரின் கடவுச்சீட்டின்/ கடவுச்சீட்டுகளின் நிழற் பிரதிகளும், விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமும்.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் வெளிநாட்டில் இருப்பின் பெற்றோரால் சட்டரீதியான பாதுகாவலருக்கு விநியோகிக்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதம்.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் விவாகரத்துச் செய்திருப்பின், விவாகரத்துச் சான்றிதழின் மூலப் பிரதியும், பிள்ளையை தமது காப்பில் வைத்திருப்பதற்கான நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவும்.

விண்ணப்பதாரி (பிள்ளை) பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளையாயின், பொலிஸ் அறிக்கையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியும், அதனை உறுதிப்படுத்தி கிராம உத்தியோகத்தரினால் விநியோகிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட கடிதமும்.

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான கட்டணம் யாது (16 வயதிற்கு கீழ்) ?

3 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை -  LKR. 3,000.00
ஒரு நாள் சேவை - LKR.9,000.00

10 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை -  LKR. 10,000.00
ஒரு நாள் சேவை - LKR.20,000.00

கடவுச்சீட்டில் பிள்ளைகளைச் சேர்த்தல்

பிள்ளைகள் என்றால் யார் ?

16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கருதப்படும்.

பெற்றோரின் கடவுச்சீட்டில் பிள்ளைகளின் பெயரை சேர்க்க முடியுமா ?

முடியாது. பிள்ளைகளுக்காக வயது  பேதம் இன்றி 2015. ஆகஸ்ட்  மாதம் முதல் தனியான கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேன்டும்.

இரட்டைப் பிரசாவுரிமை கொண்டுள்ளவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு

இலங்கையிலும் வேறொரு நாட்டிலும் பிரசாவுரிமை பெற்ற ஒருவர் கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.)

  • பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரம்.
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • இரட்டைப் பிரசாவுரிமைச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும்.
  • குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய நாட்டின் கடவுச்சீட்டும், இலங்கைக் கடவுச்சீட்டொன்று இருப்பின் அக் கடவுச்சீட்டும் (உயிர்மானத் தரவு விபரங்கள் அடங்கிய பக்கங்களின் நிழற் பிரதிகளுடன்)
  • தேசிய அடையாள அட்டையும் அதன் நிழற் பிரதியும். (1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க திருத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட ஒருவராக இருப்பின், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டதன் பின் புதிதாக தேசிய அடையாள அட்டையொன்றைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்)
  • பிறப்புச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும்.

கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  • கடவுச்சீட்டு காணாமல் போனமை பற்றி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலப்பிரதி.
  • கடவுச்சீட்டு வெளிநாடொன்றில் காணாமல் போயிருப்பின், அந் நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம், இலங்கைக்கு வருவதற்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக பயண ஆவணம் (NMRP), அதன் நிழற் பிரதியுடன்.
  • விநியோகிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் காணாமல் போன கடவுச்சீட்டுக்காக  - கடவுச்சீட்டிற்கான கட்டணத்திற்கு மேலதிகமாக தண்டப் பணமாக  ரூ. 20,000/-.
  • விநியோகிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்திற்குள் காணாமல் போன கடவுச்சீட்டுக்காக  - கடவுச்சீட்டிற்கான கட்டணத்திற்கு மேலதிகமாக தண்டப் பணமாக  ரூ. 15,000/-.
    (காணாமல் போன கடவுச்சீட்டின் உரிய செல்லுபடிக் காலம் கடந்தில்லாதிருப்பின் மட்டுமே இத் தண்டப் பணம் அறவிடப்படுகின்றது).

விசேட அறிவித்தல்: மேற்படி ஆவணங்களின் நிழற்பிரதிகளுடன் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
44299313