குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்வருகைத்தருவதற்கான வீசா

சுற்றுலாவுக்கான வருகைதரல் வீசா

அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத்தருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து  https://www.eta.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எப்படி?

இலங்கைக்குள் பிரவேசிக்கின்ற நல்லெண்ணம் கொண்ட அனைத்து உல்லாசப் பயணிகளுக்கும் அதிகாரம்பெற்ற உத்தியோகத்தர்களினால் உள்நுழையும் இறங்குதுறையில் வழங்கப்படும்தரையிறங்குவதற்கான  அனுமதிப் பத்திரங்களில்ககுறிப்பிட்டுள்ள வீசா காலம்காலாவதியாவதற்கு முன்னராக வீசாவை நீடித்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு மற்றும்குடியகல்வுத் திணைக்களத்தின் (தலைமையகத்தின்) அல்லது https://www.eta.gov.lk இணைப்பினூடாக இணைய வழியில் 30 நாட்கள் கடந்து இரண்டு (02) மாத கால நீடிப்பினை வழங்க முடியும். எவ்வாறாயினும் மேலும் நீடிப்பு தொடர்பாக நியாயமான காரணங்களின் பேரில் மாத்திரமே பரிசீலிக்கப்படும். இந்த மட்டுப்பாடுகள் முன்னாள் இலங்கையர்களுக்கு ஏற்புடையதன்று.

வருகைதரு வீசாவை நீடித்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?

குறுகியகால வீசாவைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் பெற்று (ETA – Electronic Travel Authorization) நாட்டிற்குள் பிரவேசித்தல் வேண்டும். இந்த இலத்திரனியல் பயண அங்கீகாரம் கிடைக்கப் பெறும் வரை எந்தவொரு வெளிநாட்டவரும் இலங்கைக்குள் பிரவேசித்தல் கூடாது.

சுற்றுலா வீசா

 1. திரும்பிச் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு.
 2. இலங்கையில் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியும்தொலைபேசி இலக்கமும்
 3. விண்ணப்பதாரியின் புகைப்படம் சகிதம் வீசா விண்ணப்பம்.
 4. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

* இந்த வகை வீசாவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நபர் கட்டாயமாக சமுகமளித்தல் வேண்டும். (குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (தலைமை அலுவலகத்தில் மாத்திரம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் ஆட்கள்)

வியாபார வீசா

 1. விண்ணப்பதாரியின் புகைப்படம் சகிதம் வீசா விண்ணப்பம்.
 2. வீசாவை நீடிக்குமாறு வியாபார நிறுவனத்தினால் / கம்பனியினால் / முகவர் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்படும் கடிதம்.
 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

* இந்த வகை வீசாவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நபர் அல்லது வியாபார நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் சமுகமளித்தல் வேண்டும்.கொள்வதற்கு உரிய நபர் அல்லது வியாபார நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் சமுகமளித்தல் வேண்டும்.

சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்பத்திரத்தை நான் எவ்வாறு எங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும் ?

 1. கொழும்பு, குடிவரவு மற்றும்குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில்
 2. அச்சிடப்பட்ட  விண்ணப்பப் பத்திரத்தை இங்கே பதிவிறக்கம் செய்க.

எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை ?

தங்களது சுற்றுலா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் தாங்கள் இலங்கையில் தங்கியிருக்க உத்தேசிக்கும் காலப்பகுதி முடிவுறுதல் வேண்டும்.

எனது வியாபார வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எப்படி ?

அனைத்துவித வீசா நீடிப்புகளுக்கான விண்ணப்பங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

எனது வியாபார வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை நான் எவ்வாறு எங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும் ?

 1. கொழும்பு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்
 2. அச்சிடப்பட்ட  விண்ணப்பப் பத்திரத்தை இங்கே பதிவிறக்கம் செய்க.

எனது வியாபார வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை ?

உங்களது வீசா அனுமதிப் பத்திரத்தை நீடித்துக் கொள்வதற்காக உரிய இலங்கை கம்பனி/ முகவர் நிறுவனம்போன்ற நிறுவனங்கள் ஊடாக  தேவையான ஆவண ரீதியான சாட்சியங்களை முன்வைத்தல் வேண்டும். இலங்கையில் நீங்கள் தங்கியிருப்பதற்கு எண்ணும் காலம் உங்களது சுற்றுலா ஆவணத்தில்காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் 02 மாதங்களுக்கு முன்பதாக முடிவுறுதல் வேண்டும்.
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

 • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
 • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
 • பத்தரமுல்லை.
 • 1962 / +94 112 101 500
 • +94 011 2885 358
 • controller@Immigration.gov.lk
14349043