குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



எனது கனவு இல்லம் வீசா நிகழ்ச்சித் திட்டம்

இலங்கையில் குடியமர்ந்து நீண்டகாலம் கழிக்கஉத்தேசிக்கும் மூத்த வெளிநாட்டவர்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளது.

கனவு இல்லம் வீசா என்றால் என்ன??

இலங்கையில் எனது கனவு இல்லம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீசா வகையொன்றாகும்.

நான் இலங்கையின் எனது கனவு இல்ல நிகழ்ச்சித்திட்டத்தை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

  • மீளப் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதும், இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகின்றதுமான வதியும் வீசா வழங்கப்படும்.
  • வெளிநாட்டவர்கள் மீது கருணை காட்டுகின்ற இலங்கையர் மத்தியில் சுமுகமான உணர்வுடன் பாதுகாப்பாக வசிக்கலாம்.
  • மாற்றமுறுகின்ற காலநிலை, பருவ காலங்கள் (Seasons) மற்றும் தட்ப வெப்பநிலை போன்றவற்றை அனுபவிக்கலாம்.
  • வெட்டவெளிச் சூழலில் உடல் நலத்தைத் தருகின்ற கோல்ப், டெனிஸ், விளையாட்டரங்குகளில் உடற்பயிற்சி, மரதன் ஓட்டம், நீச்சல், சர்பிங் (Surfing), ஸ்நோர்கலிங் (Snorkeling), கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி, பறவையினங்களை பார்வையிடுதல் மற்றும் உலக மட்டத்திலான வன ஒதுக்குகளில் இயற்கையை இரசித்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன.
  • சொகுசு நிறைவான பூரண வசதிகளையுடைய இல்லங்கள் அல்லது தொடர்மாடி வீடுகள் அயனமண்டல கரையோரத் துண்டு நிலங்களிலும் மத்திய மலை நாட்டிலும் பிரதான நகரங்களிலும் உள்ளன.

கனவு இல்லம் வீசா திட்டத்தில் பிரவேசிப்பதற்கான தகைமைகள் யாவை?

  1. 55 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவராகவும் இருத்தல்.

    1. 15,000 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் நிலையான வைப்புக் கணக்கொன்றில் வைப்புச் செய்திருத்தல் வேண்டும்.
    2. 1500 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை பிரதான விண்ணப்பதாரிக்காகவும் (கணவன்/ மனைவி/ பிள்ளைகளுடன் வருவதாயின்) வாழ்க்கைத் துணை/ *பிள்ளை என ஒருவருக்கு 750 அமெரிக்க டொலர் வீதம் அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை மாதந்தோறும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் நடைமுறைக் கணக்கிலோ அல்லது சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்தல் வேண்டும்.

       

*18 வயதுக்குக் குறைந்த திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

எனது கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

  1. கடவுச்சீட்டு அளவிலான இரண்டு நிறப் படங்களுடன் வசிப்பதற்கான வதிவிட வீசா விண்ணப்பப் படிவங்களை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.immigration.gov.lk  எனும் இணையத்தளத்தினுள் பிரவேசித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. வெளிநாட்டுக் கடவுச்சீட்டின்/ பயண ஆவணங்களின் (எல்லா பக்கங்களும்) அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
  3. இலங்கையில் தங்கியிருக்க இயலுமென்பதை நிரூபிப்பதற்கான நிதி நிலைமையைக் காட்டுகின்ற புதிய வங்கிக் கூற்றுகளின்/ பிற ஏற்புடைய நிதி ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
  4. மாதாந்தம் பிரதான விண்ணப்பதாரிக்காக 1,500 அமெரிக்க டொலர்களையும், ஒவ்வொரு தங்கி வாழ்பவருக்கும் 750 அமெரிக்க டொலர் வீதம் அனுப்ப முடியுமென்பதற்கான (ஓய்வூதியம்/ முதியோர் கொடுப்பனவு போன்றவை) வருவாய் மூலங்கள்.
  5. வதியும் நாட்டில் பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்ட 06 மாதங்களை விஞ்சாத பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்.
  6. வதியும் வீசா கோருகின்ற கணவன் / மனைவியின் விவாகச் சான்றிதழ்.

ஏற்புடையதான நியதிகளும் நிபந்தனைகளும் யாவை?

  • இலங்கையில் தாம் தங்கியிருக்கும் காலத்தை முடிவுறுத்த தீர்மானிக்கின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத் திட்டத்தின் கீழ் வைப்புச் செய்துள்ள மொத்த நிலையான வைப்பினையும் மீளப் பெற்றுக் கொள்ளலாம். எனினும், அப் பணத்தை மீளப்பெற குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஊடாக செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நிலையான வைப்பின் மீதான வட்டியை மீளப் பெற்று விண்ணப்பதாரியின் நலனோம்பலுக்காக செலவிடலாம்.
  • இலங்கைக்கு ஏற்புடைத்தான செல்லுபடியாகும் மருத்துவக் காப்புறுதிப் பத்திரமொன்றை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.
  • வதியும் நாட்டின் பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதடைநீக்கச்சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். வதியும் வீசா புதுப்பிக்கப்படும் வேளையில் இலங்கைப் பொலிஸாரிடமிருந்தும் அத்தகைய சான்றிதழொன்றைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  • எவ்விதமான குற்றவியல் குற்றச் செயலிலும் ஈடுபட்டிருத்தலாகாது.
  • இலங்கையில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகாதென்பதுடன், சுதேசிகளின் உணர்வுகளைப் பாதிக்குமெனக் கருதக்கூடிய எவ்விதமான கருமத்திலும்அதே போன்று நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகாது.
  • இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எந்தவொரு தொழிலிலும் ஈடுபடலாகாது.
  • வதியும் விருந்தினர்களான விண்ணப்பதாரிகள் இலங்கையின் வரி தொடர்பான சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் கட்டுப்படல் வேண்டுமென்பதுடன், ஏற்புடைய வரிகளை அவர்கள் செலுத்தவும் வேண்டும்.
  • ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தனது நிலையான வைப்புக் கணக்கினைப் போன்றே சேமிப்பு வைப்புக் கணக்குகள் பற்றிய அரையாண்டு வங்கிக் கூற்றுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் (வீசா) அவர்களிடம் சமர்ப்பிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வீசா நிலைமை பற்றியும், சொந்த தகவல்கள் பற்றியும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அத்தகைய மாற்றங்ளை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் (வீசா) அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் எவ்வாறு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன?

  • விண்ணப்பப் படிவங்கள் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் மாத்திரமே பொறுப்பேற்கப்பட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
  • விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பப்படிவத்தின் நிலவரம் பற்றி விண்ணப்பதாரிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும்.
  • வெற்றிகரமான விண்ணப்பதாரிகளுக்கு (அ) வாழ்க்கைச் செலவுக்காக 1,500 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணிக் கணக்கினையும், சேமிப்புக் கணக்கினையும் ஆரம்பிப்பதற்காக தற்காலிகமாக அனுமதி வழங்கும் கடிதமும், (ஆ) வங்கியின் தொழிற்பாட்டு முகாமையாளரின் பெயருக்கு வரையப்பட்ட அறிவுறுத்தல் கடிதமும் விநியோகிக்கப்படும்.
  • 15,000 அமெரிக்க டொலர் நிலையான வைப்பு மற்றும் மாதாந்த அனுப்பீடாக 1,500 அமெரிக்க டொலர்களை அனுப்பி வைப்பதற்கான வங்கிக் கூற்றினையும் விண்ணப்பதாரி உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும். (ஏற்புடையவாறு ஒவ்வொரு தங்கி வாழ்பவருக்கும் 750 அமெரிக்க டொலர் மாதாந்த அனுப்பீடு இதில் அடங்கியிருத்தல் வேண்டும்.)
  • வதியும் வீசா இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும். இதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரிக்கும், தங்கிவாழ்வோருக்கும் இது வழங்கப்படும்.
  • ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் தங்கிவாழ்பவருக்குமான விண்ணப்பப் பத்திர செயல்முறைக் கட்டணம் 150 அமெரிக்க டொலர்களாகும்.
  • ஒரு விண்ணப்பதாரி, வாழ்க்கைத் துணை மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட தங்கிவாழும் பிள்ளைகளுக்கான வதியும் வீசா கட்டணமும் வட்டியும் ஆண்டொன்றுக்கு 200 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

வதியும் வீசா காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கை முறை

எனது வதியும் வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

  • வெளிநாட்டுக் கடவுச்சீட்டின்/ புதிய வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் பிரதி.
  • நிலையான வைப்பை புதுப்பிப்பதற்கான சான்றிதழும்சேமிப்புக் கணக்குக் கூற்றும்.
  • மருத்துவ காப்புறுதிப் பத்திர புதுப்பித்தல் அறிவித்தல்.
  • இலங்கையில் பெறப்பட்ட பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்.

விண்ணப்பப் படிவங்களுக்காகவும் அறிவுறுத்தல்களுக்காகவும் எம்முடன் தொடர்பு கொள்க.

கனவு இல்ல வீசா விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?

  • கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில்.
  • விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம்.

எனது கனவு இல்ல வீசா விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது எப்படி?

எனது கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீசாவுக்காக விண்ணப்பித்து இலங்கைக்கு வருவதற்காக உங்களுக்கு உங்களது சுற்றுலா வீசா இலத்திரனியல் பயண அங்கீகார விண்ணப்பப் படிவத்தை (ETA Application), அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது கனவு இல்லம் வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?

வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.

எனது கனவு இல்லம் வீசாவின் உச்ச செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?

செல்லுபடியாகும் காலம் இரண்டு 02 வருடங்களாகும். இதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நான் எனது கனவு இல்லம் வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?

வீசா காலத்தை நீடித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் (வீசா) அவர்களிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

எனது கனவு இல்லம் வீசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?

  • கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்
  • விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம்.

எனது கனவு இல்லம் வீசாவை புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?

உங்கள் பயண ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும், இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23437335