குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்RTI கட்டணங்கள்

 1. விண்ணப்பக் கட்டணங்கள்:
  1. எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான கோரிக் கையை மேற்கொள்ளும் எந்தவொரு பிரஜைக்கும் தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவத்தை வழங்குவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.
  2. எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான உரிமைக் கோரிக்கையை செயன்முறைப் படுத்துவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.
    
 2. தகவல்கள் மற்றும் கட்டணங்கள்:

  தகவலுக்கான கட்டணம் வேறு விதமாக விதித்துரைக்கப்பட்டாலன்றி RTI கோரிக்கை ஒன்றுக்கான பதில் நடவடிக்கையாக பகிரங்க அதிகார சபை ஒன்று தகவலை வழங்குவதற்கு பின்வரும் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
  1. நிழற்படப்பிரதி:
   1. A4 (21 செமீ ஒ 29.7 செமீ) மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 2/- (ஒரு பககம்) மற்றும் ரூபா 4/- (இரண்டு பக்கங்களும்)
   2. லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ ஒ 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 8/- (இரண்டு பக்கங்களும்)
   3. மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.
     
  2. அச்சுப்படிகள் (Printout)
   1. A4 (21 செமீ x செமீ 29.7 )மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பககம் ) மற்றும் ரூபா 8/- இரண்டு பக்கங்களும்
   2. லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 5/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 10/- (இரண்டு பக்கங்களும்)
   3. மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.
     
  3. கோரிக்கையை விடுக்கும் பிரஜையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு (Compact Disc), USB mass drive அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் தகவல்களைப் பிரதியிடுவதற்கு ரூபா. 50/-
    
  4. பகிரங்க அதிகார சபையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு; (Compact Disc), USB mass drive அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் தகவல்களைப் பிரதியிடுவதற்கு உண்மையான கிரயத்துடன் ரூபா. 50/-.
    
  5. ஏதேனும் ஆவணம் அல்லது சாதனத்தை ஆராய்வதற்கு அல்லது நிர்மாணத்தலத்தின் பரிசோதனைக்கு மணித்தியாலம் ஒனறுக்கு ரூபா. 50/- இதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்குமாயின், முதல் மணித்தியால ஆய்வுக்கு / பரிசோதனைக்கு கடடணம் விதிக்கப்படாது. இது அத்தகைய பரிசோதனையை முன்னர் கட்டணமின்றி வழங்கிய பகிரங்க அதிகார சபைகளின் நடைமுறைககு பங்கமின்றி இது மேற்கொள்ளப்படுவதுடன் இந்நடைமுறை இந்த உப விதியினால் தடைபெறாது தொடர்ந்தும் நடைமுறைபபடுத்தப்படுதல் வேண்டும்.
    
  6. மாதிரிகள் அல்லது உருப்படிவங்களுக்கு உண்மையான கிரயம் விதிக்கப்படும்.
    
  7. மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் இல்லை.
    
 3. சுற்றறிக்கைகள அல்லது ஒழுங்குவிதிகள் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளினால் விதித்துரைக்கப் பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து, விதி 4 இல் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் எவ்வாறிருப்பினும் அந்தக் கட்டண அட்டவணை தொடர்ந்தும் தொழிற்பாட்டில் இருத்தல் வேணடும்.
  ஆயின், தற்போதுள்ள கட்டண அட்டவணைகள் தொடர்பான கோரல்களின் ஏதேனும் பிணக்கு கட்டணங்கள் மற்றும் மேனமுறையீடுகள பற்றிய இந்த விதிகளுக்கு இணங்க ஆணைக்குழுவினால் தீர்மானிக்க வேண்டிய மேன்முறையீட்டுக்கான ஒரு விடயப் பொருளாகலாம்.
   
 4. கட்டணமின்றி வழங்கப்படும தகவல்கள்:
  1. மேலே உள்ள விதி 4 இல் உள்ள எதனாலும் தடைப்படாது, ஆறு பக்கங்கள் (A4 அளவு) நிழற்பிரதிகள் அல்லது அசசுப் படிகளில் தயாரிக்கப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட தகவல்களை பகிரங்க அதிகார சபை கட்டணம் இன்றி வழங்குதல் வேணடும்.

  2. சாதாரணமாக கட்டணமின்றி கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவல்கள் தொடர்ந்தும் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

 5. கட்டணம் செலுத்தும் முறை:

  1. இந்த விதிகளில் வேறு எங்கேனும் காணப்படும் எதனாலும் தடைப்படாது பகிரங்க அதிகாரசபை  தகவல்களுக்கு பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்.

   1. தகவல் அலுவலருக்கு செலுத்தும் பணமாக

   2. பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்கு முகவரியிட்டனுப்பப்படும் வங்கி உண்டியல்;

   3. பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்குச் செலுத்தக்கூடியதாக மேற்கொள்ளப்படும் தபால் அலுவலக கொடுபபனவுச் சிட்டை அல்லது தபால் கட்டளை.

  2. தகவல் அலுவலர் கொடுப்பனவு செலுத்தப்படும் விதத்தைப் பொருட்படுத்தாது கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு பறறுச்சீட்டு ஒன்றை வழங்குதல் வேண்டும்.

 6. தகவலைப் பெற அணுகுதல்:

  1. பாரிய அளவிலான கோரிக்கைகளுக்கு தகவல் அலுவலர் தகவலைப் பெறுவதற்கான அணுகுதலை வழங்குவதற்கு முன்னர் அணுகுதலை மேற்கொள்ளக்கூடிய பல்வேறு வடிவங்களையும் அவற்றின் கட்டணங்களையும் அவ்வாறே குறிப்புகளை எழுதும் பிரித்தெடுப்புகளைப் பிரதிபண்ணும் வாய்ப்புகளையும் பகிரங்க அதிகார சபையின் தற்றுணிபின் பிரகாரம் தொலைபேசியை அல்லது சிறிய புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்தி சாதனத்தின் நிழறபடத்தைப் பெறுதல் உள்ளடங்கலாக கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜைக்குத் தெரிவித்தல் வேணடும்.

  2. விதிகள் 5 மற்றும் 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு விதிவிலக்காக கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜைக்கு சாதனத்துக்கான அணுகுதலை வழங்குவதற்கு முன்னர் விதித்துரைக்கப்பட்ட கட்டணம் முழுமையாகச் செலுத்தப்படுதல் வேணடும்.

 7. முதன்மையான வெளிப்படுத்தல்:

  1. சடடத் தின் பிரிவு 8 ஐப் பின் பற்றி அமைச்சர் களினாலும் சட்டத்தின் பிரிவு 10 ஐப் பின்பற்றி பகிரங்க அதிகார சபைகளாலும் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் கட்டணமின்றி பரிசோதனைக்கு பகிரங்கமாகவும் வலைத் தளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்வதற்கும் இலத்திரனியல் பிரதிகள் அடங்கலாக பிரதிகளும் கிடைக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும், தகவல் வேண்டுகோளை மேற்கொள்ளும் ஒரு பிரஜைக்கு மேலே உள்ள விதிகளில் விதிததுரைக்கப்பட்ட கட்டணங்களுக்கு இணங்கவும் இருத்தல் வேண்டும்.

  2. கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைச்சர், சட்டத்தின் பிரிவு 9 ஐப் பின்பற்றி கருத்திட்டம் தொடர்பான எல்லா சாதனங்களும் பகிரங்கமாகக் கிடைக்கச் செய்தல் வேண்டும். அத்தகைய சாதனம்,கட்டணமின்றி பரிசோதனைக்கு பகிரஙகமாகவும் வலைத்தளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்வதற்கும் இலத்திரனியல் பிரதிகள் அடங்கலாக பிரதிகளும் கிடைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும், தகவல் வேண்டுகோளை மேற்கொள்ளும் ஒரு பிரஜைக்கு மேலே உள்ள விதிகளில் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்களுக்கு இணங்கவும் இருத்தல் வேண்டும்.

 8. கட்டணங்கள் தொடர்பான மேன்முறையீடுகள்:

  1. தகவல் அலுவலரினால் விதிக்கப்பட்ட கட்டணம் தகுந்தவாறு தேவைப்படுத்தப்படும் தொகைக்கு மேன்மிகையானது என கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜை கருதினால், RTI ஒழுங்குவிதிகளில் விதித்துரைக்கப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிரிவு 231 இன் பிரகாரம் செலுத்தவேண்டிய கட்டணத்தை தகவல் அலுவலர் தெரிவித்ததிலிருந்து பதினான்கு நாட்களுக்குள் அவர் குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் மேன்முறையீட்டை  மேற்கொள்ளலாம்.

  2. குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தில் கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜை திருப்தியடையாவிடின், அவர் சட்டத்தின் பிரிவு 32 இலும் அதனுடன் தொடர்பான சம்பந்தப்பட்ட விதிகளிலும் விதித்துரைக்கப்பட்ட மேன்முறையீட்டு நடவடிககைமுறையையும் பின்பற்றி தீர்மானம்; மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களினுள் ஆணைக்குழுவுக்கு மேனமுறையீடு செய்யலாம்

  3. குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு அத்துடன் அல்லது ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கு கட்டணம் ஒனறைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. மேன்முறையீட்டுப் படிவங்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும்.

 9. வெற்றிகரமான மேன்முறையீட்டின் மீதமைவாக கட்டண விதிப்பனவிலிருந்து விலக்களிப்பு:
  தகவல் கோரிக்கை ஒன்றை மேற்கொள்ளும் ஒரு பிரஜை குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு அல்லது ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டை வெற்றிகரமாக மேறகொண்டால், கோரிக்கையை விடுக்கும் பிரஜைகளுக்கு கோரப்பட்ட தகவல் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

 10. கட்டணங்களின் மீளளிப்பு:
  ஆணைக்குழு,சட்டத்தின் பிரிவு 15(எ)இற்கு இணங்க கோரிக்கை ஒன்றை மேற்கொண்ட பிரஜை ஒருவரிடம் விதிக்கப்பட்ட கட்டணத்தை சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் தகவல் வழங்கப்படாதவிடத்து மளளிப்புச் செய்யுமாறு ஆணைக்குழுவைப் பணிக்கலாம்
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

 • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
 • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
 • பத்தரமுல்லை.
 • 1962 / +94 112 101 500
 • +94 011 2885 358
 • controller@Immigration.gov.lk
15775380