குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள்

அத்தாட்சிப்படுத்தல் சேவை

கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியை எவ்வாறு அத்தாட்சிப்படுத்திக் கொள்வது ?

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகச் சேவைகள் கிளையினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இச்சேவையைப் பெற அவசியமான ஆவணங்கள் யாவை ?

மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான அதன் நிழற் பிரதிகளும்.

இச்சேவைக்குரிய தயாரித்தல் கட்டணம் யாது ?
பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/-

(பிரதான பக்கம் மாத்திரம் அத்தாட்சிப்படுத்தப்படும்)
 

 

மொழிபெயர்ப்புச் சேவை

கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையினால் வழங்கப்படும்.

எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது ?

விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகை தரல் வேண்டும்.

இச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்புடைய தயாரித்தல் கட்டணம் யாது ?

ஒரு கடவுச்சீட்டினை மொழிபெயர்க்க 1200/- இலங்கை ரூபா அறவிடப்படும்.

 
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
16570519