குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



கடவுச்சீட்டின் தகவல்களை திருத்தம் செய்தல்

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும்.

(அச்சிடப்பட்ட விண்ணப்பப்பத்திரத்தை இங்கே பதிவிறக்கம்  செய்க)

ஏனைய மாற்றியமைத்தல்கள்

தகவல்களை மாற்றியமைப்பதற்காக விண்ணப்ப பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  • குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம், கொழும்பு.
  • கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல்  பிராந்திய அலுவலகங்கள்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம்.
  • அச்சிடக்கூடிய விண்ணப்பப் பத்திரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுடக்குக.

தகவல்களை மாற்றியமைப்பதற்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?

  • குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம், கொழும்பு.
  • கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம்.

தகவல்களை மாற்றியமைப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும் ?

1 மணி நேரம் 30 நிமிடங்கள்

தகவல்களை மாற்றியமைப்பதற்கான கட்டணம் யாது ?

கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும்.

எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு ?

கடவுச்சீட்டொன்றில் தகவல்களில்/ விபரங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்துடன் கீழ்க் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு தேவையான ஆவணங்களை, அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

கவனிக்க – மூலப்பிரதிகள் சகிதம் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

 

திருத்தம் அவசியமான ஆவணங்கள்  கட்டணம்
பெயரை மாற்றுதல். கடவுச்சீட்டுடன் ஏற்புடையவாறு பிறப்புச் சான்றிதழ் அல்லது விவாகச் சான்றிதழ் இலங்கை ரூபா.1,200.00
பிள்ளையின் பெயரை நீக்குதல் கடவுச்சீட்டு இலங்கை ரூபா.1,200.00
தொழிலை உள்ளடக்குதல் தொழிலை நிரூபிக்கின்ற அல்லது தகைமைகளை நிரூபிக்கின்ற ஆவணங்கள் இலங்கை ரூபா.1,200.00
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்சேர்த்தல் தேசிய அடையாள அட்டை இலங்கை ரூபா.1,200.00
ஒரே வழிப் பயணத்தை செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும், பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா.1,200.00
இந்தியா, நேபாளம் ஆகியவற்றை மட்டும் செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா.1,200.00
பிற மாற்றங்களைச் செய்தல்   இலங்கை ரூபா.1,200.00



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
27426249