குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்முக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து
பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு.

முக்கிய அறிவித்தல்

மக்களுக்கு உயர் தரத்திலான கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் திணைக்களத்தின் கொள்கைக்கு அமைய, புகைப்பட நிலையங்களூடாகப் பெற்றுக் கொள்ளப்படுகின்ற கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்களின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2018 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, எமது திணைக்கள முறைமை ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பதாக, அனுப்பப்படுகின்ற புகைப்படத்தின் தரத்தைப் பரீட்சிப்பதற்காக உயர் மட்டத்திலான பரீட்சித்தல் முறைகள் கையாளப்படுமென்பதுடன், நாம் சர்வதேச தரநிர்ணயங்களை அடைவதற்கு, புகைப்படங்களின் தரத்தைப் பரீட்சிக்கும் இந்த மேலதிக பரீட்சித்தல்கள் எமக்கு உறுதுணையாக அமையும். அதே போன்று இங்கு முறைமையினால் ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்படுகின்ற புகைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

புகைப்படங்களின் தரத்தை அளப்பதற்கான இந்த உயர் மட்டத்திலான பரீட்சித்தல் மீது கூடிய கவனம் செலுத்தி, இதனால் ஏற்படக் கூடிய சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் உயர் தரத்திலான புகைப்படங்களைப்  பெற்றுத் தருவதற்கு எடுக்க முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும்,

இப் பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுகின்றேன். அத்துடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 5329313 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

தங்களது புகைப்பட நிலையத்தில் இந்த வசதிகள் காணப்படுமாயின், அதனை உறுதிப்படுத்தவும்.

 

 

கட்டுப்பாட்டாளர் (கடவுச்சீட்டு)
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
17485043