குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



வீசா கட்டணம்

உரிய காலப்பகுதிக்கு மேல் தங்கியிருந்தமைக்காக அறவிடப்படும தண்டப்பணம்

இல2337/10 மற்றும் 2023.06.21 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகைக்கு அமைய வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் மிகைத் தங்கியிருப்புக்கான காலப்பகுதிக்கு தண்டப்பணம் அறவிடுதல் 2023.06.21 ஆம் திகதி முதல் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

  • மிகைத்து தங்கியிருந்த காலப்பகுதி ஏழு நாட்களை (07)விஞ்சியுள்ளதுடன் மூல விசாவின் செலலுபடியாகும் காலப் பகுதி முடிவுற்ற திகதியிலிருந்து கணக்கிடப்பட்ட பதினான்கு (14)நாட்கள் வரை தொடர்ந்திருந்துள்ளவிடத்து,இருநூற்றி ஐம்பது (250)அமெரிக்க டொலர்கள் ஏற்புடையதான விசாக் கட்டணத்துக்கு மேலதிகமான தண்டப்பணமொன்றாக அறவிடப்படும்;
    அத்துடன்
     
  • மிகைத்து தங்கியிருந்த காலப்பகுதி பதினான்கு நாட்களை (14)விஞ்சியுள்ளதுடன் மூல விசாவின் செல்லுபடியான காலப்பகுதி முடிவுற்ற திகதியிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளவிடத்து,ஐந்நூறு (500)அமெரிக்க டொலர்கள் ஏற்புடையதான விசாக் கட்டணத்துக்கு மேலதிகமான தண்டப்பணமொன்றாக அறவிடப்படும்.
     
  • மிகைத்து தங்கியிருந்த காலப்பகுதி மூல விசாவின் செல்லுபடியான காலப்பகுதி முடிவுற்ற திகதியிலிருந்து கணக்கிடப்பட்ட ஏழு (7)நாட்களினுள் இலங்கையிலிருந்து வெளியேறுகின்றவரான ஆளொருவர்,ஏதேனும் தண்டப்பணத்தைச் செலுத்தாது புறப்படும் துறையில் ஏற்புடையதான விசாக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறலாம்.

* பயணி வருகைத்தந்த திகதியிலிருந்து வீசாக் கட்டணங்கள் அறவிடப்படும்.

  வீசா வகுப்பு கட்டணம் அ.டொ (வருடத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு)
வதிவிட வீசா - 1
  1. முதலீட்டாளர்களுக்கு
  2. ஊழியர்களுக்கு
  3. மாணவர்களுக்கு
  4. மருத்துவ வீசாவுக்கு
  5. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வீசா
  6. சமய நடவடிக்கைகளுக்கான வீசா
  7. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் வாழ்க்கைத் துணைக்கு
  8. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் தங்கிவாழும் பிள்ளைகளுக்கு
  9. எனது கனவு இல்லம் வீசா நிகழ்ச்சித் திட்டம்
  10. வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழான வீசா நிகழ்ச்சித் திட்டம்
  11. நீதிமன்றத்தில்   தோன்றுவதற்கான வீசா அனுதிப்பத்திரம்
200
வதிவிட வீசா - 2
  1. குடியுரிமைச் சட்டத்தின் 19,20 மற்றும் 21 ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ள எவருக்கும்
  2. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் வாழ்க்கைத் துணைக்கு
  3. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் தங்கிவாழும் பிள்ளைகளுக்கு
100
வதிவிட வீசா - 3
  1. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆம் பிரிவின் கீழ்  பிரஜையொருவராக பதிவுசெய்துள்ள எவருக்கும்
  2. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் வாழ்க்கைத் துணைக்கு
  3. மேற்குறிப்பிடப்பட்ட ஆளின் தங்கிவாழும் பிள்ளைகளுக்கு
100
வதிவிட வீசா - 4

மதகுருமாருக்கு

இலவசம்
வதிவிட வீசா - 5

இலங்கைப் பிரஜை ஒருவரை திருமணம் முடித்துள்ள வெளிநாட்டு வாழ்க்கைத்துணைக்கு

இலவசம்
இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணையின் தங்கிவாழும் பிள்ளைகளுக்கு 150
வதிவிட வீசா - 6 மீண்டும் திருமணம் முடிக்காத, மரணமெய்திய இலங்கையர் ஒருவரின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) 100
வதிவிட வீசா - 7 பத்து வருடங்களுக்கு குறையாத காலம் இலங்கையில் தொடர்ச்சியாக வசித்துவரும் இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கைப் பிரஜை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) 100
வதிவிட வீசா - 8 பதினெட்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கைப் பிரஜை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) 100
வதிவிட வீசா - 9 வௌிநாட்டுக் கடவுச்சீட்டு  வைத்துள்ள  இலங்கைப்  பெற்றோரின் பிள்ளைகள்  150

 

சுற்றுலா வீசா சுற்றுலா நடவடிக்கைகளுக்காக இணையவழியில் வரும்போது
முதல் 30 நாட்களுக்கு

சார்க்  (SAARC) நாடுகள்

(இலத்திரனியல் பயண அனுமதி -  ETA)
(
முதல் 30 நாட்களுக்கு )

20 25
முதல் 30 நாட்களுக்கு

சார்க்  (SAARC) நாடுகள் அல்லாத வேறு எந்தவொரு நாட்டுக்கும்

(இலத்திரனியல் பயண அனுமதி -  ETA)
(
முதல் 30 நாட்களுக்கு )

50 60
முதல் 180 நாட்களுக்கு எந்தவொரு நாட்டுக்கும்
(இலத்திரனியல் பயண அனுமதி - ETA)
 (முதல் 180 நாட்களுக்கு)

(இது 2023.06.24 ஆம் திகதி வரை மாத்திரம்  செல்லுபடியாகும்)

50 -
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை

பின்வரும் நாடுகளுக்கு

ஆஸ்திரியா,பெல்ஜியம்,டென்மார்க், நெதர்லாந்து, போலாந்து, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ், சுவீடன், ஹங்கேரி, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா,கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, எஸ்டோனியா, மொரிஷியஸ், ஐஸ்லாந்து மற்றும் கியுபே

இணைய வழியில் பிரதான அலுவலகத்தில்
100 100
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை

ஐக்கிய அமெரிக்காவுக்கு

- இலவசம்
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை

சிங்கப்பூர், மாலைத்தீவு, சீசெல்ஸ் மற்றும் செக் குடியரசு

- இலவசம்
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை

குறித்துரைக்கப்பட்டுள்ள  ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர், மாலைத்தீவு, சீசல்ஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டுக்கும்,

- 60
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை

ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டுக்கும்

- 150
வருகைத்தந்த நாளில் இருந்து 180   நாள் முதல் 270 நாட்கள் வரை

எந்தவொரு நாட்டுக்கும்

- 200
சுற்றுலா வீசா

வியாபார நடவடிக்கைகளுக்கு

இணைய வழியில் வருகைத்தரும் போது
ஆரம்ப 30 நாட்களுக்கு

சார்க்  (SAARC) நாடுகள் 

(இலத்திரனியல் பயண அனுமதி   - ETA)

30 -
ஆரம்ப 30 நாட்களுக்கு

சார்க்  (SAARC) நாடுகள் அல்லாத வேறு எந்தவொரு நாட்டுக்கும்

(இலத்திரனியல் பயண அனுமதி -  ETA)

55 -
30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை

ஐக்கிய அமெரிக்காவுக்கு (30 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)

(பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்)

100
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை

ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாட்டுக்கும் (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை)

(பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்)

100
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை

ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாட்டுக்கும் (90 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)

(பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்)

200
இடைத்தங்கல் வீசா

அனைத்து நாடுகளுக்கும்

இலவசம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தந்தோ அல்லது https://eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்தின் மூலமோ 30 நாட்களின் பின்னர் சுற்றுலா வீசா காலப்பகுதியை நீடித்துக்கொள்வதற்காக
மேலதிக தகவல்களுக்கு இல 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்க
 



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
13907087