குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்

புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப அனுமதி நடைமுறை

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும்  கைவிரல் அடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் புகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமர்ப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  கைவிரல் அடையாளங்கள் எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமுகமளித்தல் வேண்டும்.

முக்கிய விடயங்கள்:

  1. எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயது பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் K 35A  (பதிவிறக்கம்) இனை சமர்ப்பித்தல் வேண்டும். (அறிவுறுத்தல்)
  2. குழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.
  3. 16 வயதுக்கும் - 60 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும்  கைவிரல் அடையாளங்கள் எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும்.
  4. வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது  கைவிரல் அடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம்.
  5. பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.

டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம் ?

  1. தங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள். ஆறு (06) மாதங்களுக்குள் பெற்றுக்கொண்ட புகைப்படங்கள் மாத்திரம் செல்லுபடியாகும்.
  2. புகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக எமது கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர். அச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை.
  3. புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் +94 112 101 500

இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா ?

நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல்

உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளல்  தொடர்பான தகவல்களை கீழே பார்க்கவும்).

கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை

தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். 16 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, அவர்களின் முக அடையாளம் மாறுபடுவதின் காரணமாக 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வழங்கப்படும். அல்லது  பெற்றோரின்  கோரிக்கைக்கு ஏற்ப 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வழங்கப்படும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம்.

கடமை நேரங்கள் யாவை ?

  • சாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் - கிழமை நாட்களில் மு.ப. 7.00 மணி முதல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
  • இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கும் கருமபீடம் - மு.ப. 8.00 முதல்  நன்பகல் 12.00 மணி வரை

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்பது எப்படி ?

பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – ஒருநாள் சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடத்தைக் கண்டறிவதற்கு உரிய பொத்தானை அழுத்தவும்.

கடவுச்சீட்டு வகைகள் யாவை ?

  1. அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு
    • சாதாரண கடவுச்சீட்டு
    • இராஜதந்திர கடவுச்சீட்டு
    • உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு.
  2. இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்.
  3. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது.


கடவுச்சீட்டு விநியோக நடைமுறையில் உயிர்மான தரவுகளை உள்ளடக்குதல்

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு விநியோகத்தின் போது கை விரலடையாளங்களை உயிர்மானத் தரவுகளாக கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள இலங்கை அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு அமைய விண்ணப்பதாரிகளின் நிழற்படங்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான ஏற்பாடுகளினால் இலங்கை கடவுச்சீட்டானது சர்வதேச அங்கீகாரத்துடனான பயண ஆவணமாக கருதப்படும்.

புதிய கடவுச்சீட்டு விநியோக நடைமுறை பற்றிய முக்கியமான விடயங்கள்.

விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்

  1. புதிய நடைமுறைக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யத்தக்கதாக திருத்தப்பட்ட K 35A விண்ணப்பப்படிவம் பயன்படுத்தப்படல் வேண்டும்.
  2. இவ்விண்ணப்பப்படிவங்கள் எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம், பிராந்திய அலுவலகங்களான கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், அல்லது எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வலைத்தளமான www.immigration.gov.lk என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  3. கை விரலடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியமையால் எல்லா விண்ணப்பதாரர்களும் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திற்கோ அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கோ வருகை தருதல் அவசியமாகும்.

சர்வதேச தரத்தில் உறுதிச்செய்யப்பட்ட நிழற்படங்கள்

  1. அச்சிடப்பட்ட நிழற்படங்கள் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எல்லா விண்ணப்பதாரர்களும் நாடெங்கிலுமுள்ள எமமு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் அல்லது திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் அதன் பிராந்திய காரியாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட நிலையங்களில் தமது நிழற்படங்களினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
  2. குறிப்பிட்ட புகைப்பட நிலையங்களினால் அச்சிடப்பட்ட நிழற்படங்கள் வழங்கப்படாது, உங்களது நிழற்படங்கள் புகைப்பட நிலையங்களினால் இணையத்தின் வாயிலாக எமது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தரவுத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
  3. புகைப்பட நிலையங்களினால் வழங்கப்படும் புகைப்படம் பெற்றுக்கொண்டதற்கான அறிவித்தற் குறிப்பு விண்ணப்பப்படிவத்துடன் கட்டாயமாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  4. அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களின் பெயர்ப்பட்டியல் செய்திப் பத்திரிகைகளிலும் எமது www.immigration.gov.lk  எனும் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.

கை விரல் அடையாளங்களைப்  பெற்றுக்கொள்ளல்

  1. 2015 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் பிரகாரம், 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குக் குறைந்த கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகள் அனைவரும் இத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் அல்லது பிராந்திய அலுவலகங்களில் தமது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.


முக்கிய குறிப்பு

2015 ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்குப் பின்னர் 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் விபரங்கள் இனிமேல் அவர்களது பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளல் அவசியமாகும்.

மேலதிக தகவல்கள் : துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் +94 112 101 500

விசேட குறிப்பு

வீசா விண்ணப்பிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு பின்லாந்து அரசாங்கத்தினால் விதிக்கப்படும் புதிய ஒழுங்கு விதிகள்

பின்லாந்துக்கு வீசா விண்ணப்பிக்க உத்தேசிப்பவர்கள் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம்  செலுத்தல்  வேண்டும்.

  • பின்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறைக்கு அமைய இரண்டாம் பக்கத்தில் பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடன் இலங்கை கடவுச்சீட்டை அனுமதிப்பதற்கு பின்லாந்து தூதரகத்தினால் இதற்குப் பின்னர் அனுமதி வழங்கப்படமாட்டாது.
  • வீசாவில் அல்லது வதிவிட அனுமதிப் பத்திரமொன்றில் விண்ணப்பதாரியின் பெயரில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் அவ்வாறான விண்ணப்பதாரிகள் சரியான பெயரில் புதிய கடவுச்சீட்டு ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • கடவுச்சீட்டின் முதற் பக்கத்தில் பதிப்பிக்க முடியாத அளவுக்கு பெயர் நீண்டதாக அமையும் போது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் அந்தப் பெயரைப் பதிவதற்கு அனுமதி வழங்கப்படும்.

விசேட குறிப்பு -  மியன்மார்

சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாட்டு எல்லைகளைக் கடக்கும்  போதான பொதுச் சுகாதார  தேவைப்பாடுகள் (1-3-2024) .   மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக்  செய்யவும்.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23440402