குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



குடியுரிமை பற்றிய பொதுவான தகவல்கள்

இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான பொதுவான ஏற்பாடுகள்

வெளிநாட்டில் பிறந்த பிள்ளையை/ பிள்ளைகளைப் பதிவு செய்தல், இலங்கை குடியுரிமையை இரத்துச் செய்து கொள்ளல் அல்லது இலங்கையில் இரட்டைக் குடியுரிமையாளர்களாகப் பதிவு செய்தல் போன்ற சேவைகள் குடியுரிமைப் பிரிவினால் தங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் 4 ஆம் மாடியில், D பகுதியில் அமைந்துள்ள குடியுரிமைப் பிரிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

சேவை வழங்கப்படும் நேரம்: அரசாங்க மற்றும் பொது விடுமுறைத் தினங்கள் தவிர்ந்த வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 02.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

இலங்கையின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள்

இந்திய – இலங்கை குடியுரிமைப் பிரிவினால் இந்திய வம்சாவளி மக்களை இலங்கைப் பிரஜைகளாக பதிவுசெய்யும் சேவை வழங்கப்படுகின்றது. அதற்கிணங்க,

  1. 1988 இல 39 எனும் நாடற்றோருக்கு குடியுரிமையை வழங்கும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2003 இல 35 இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டத்தின் கீழ் அவர்களது கோரிக்கையின் பேரில் இலங்கை குடியுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்குதல்.
  2. 2003 இல 35 எனும் இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கையின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டிய விசேட பிரகடனத்தை செய்த பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கும் கடிதங்களை வழங்குதல்.
  3. பின்வரும் சட்டங்களின் ஏற்பாடுகளின் பிரகாரம் பதிவின் மூலம் குடியுரிமையைப்பெற்ற ஆளொருவருக்கு அல்லது அவ்வாறன ஒருவரின் வழித்தோன்றல்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் ஏற்புடைய பதிவு பற்றிய தகவல்களை சமர்ப்பித்த பின்னர் அது தொடர்பில் உறுதிப்படுத்தி கடிதங்களை வழங்குதல்.
    1. 1949 இல 03 எனும் இந்திய மற்றும் பாகிஸ்தான் குடியிருப்பாளர்களின் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்கள்
    2. 1967 இல 14 எனும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்கள்.
    3. 1988 இல 39 எனும் நாடற்றோருக்கு குடியுரிமையை வழங்கும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும்  அதற்கு ஏற்புடைய திருத்தங்கள்.
    4. 2003 இல 35 எனும் இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டம் அதற்கு ஏற்புடைய திருத்தங்கள்.
    5. 2008 இல 38 எனும் சீன வம்சாவளி மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.

இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் இந்திய – இலங்கை குடியுரிமைப் பிரிவில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சேவை வழங்கப்படும் நேரம் :- அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை குடியுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மு.ப. 9.00 முதல் பி.பி. 3.00 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

 மேலதிக தகவல்களுக்கு :  விசேட ஏற்பாடுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23440908