குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்முதலீட்டாளர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நீண்டகால வதிவிட வீசா

 1. பொன் சுவர்க்க விசா (Golden Paradise Visa)

  தகுதியானவர்கள் :பொன் சுவர்க்கவிசா (Golden Paradise Visa) திட்டம் –விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்


  வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு
   
   

  குறைந்த முதலீடு

  காலப் பிரிவு
  பொன் சுவர்க்கவிசா (Golden Paradise Visa)

  USD 200,000 –  இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் வணிக வங்கியொன்றில் வைப்புச்செய்தல்

  (பொன் சுவர்க்க வீசாவை விநியோகிக்கப்படும் திகதியிலிருந்து முதலாவது ஆண்டு பூர்த்தியடைந்த பின்னர் 50% ஆகக் குறைந்த முதலீடு வரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.)

  10 வருடங்கள்

  மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுக
   
 2. நேரடி முதலீடுகள்

  தகுதியானவர்கள் : (விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர்உதவியாளர்கள்,
  சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள்– மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

  சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : ஏற்புடைய நிரல் அமைச்சு / இலங்கை முதலீட்டுச் சபை  (BOI)

  வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு

   
   

  குறைந்த முதலீடு

  காலப் பிரிவு
  நேரடி முதலீடுகள்

  USD 300,000

  5 வருடங்கள்

  USD 500,000

  10 வருடங்கள்
 3. கூட்டு ஆதனங்களில் (condominium properties) முதலீடு செய்தல்

  வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு

   
   

  குறைந்த முதலீடு

  காலப் பிரிவு அனுமதிக்கப்படும் ஆட்கள்
  தனிநபர்கள்
  கூட்டு ஆதனங்கள்
  ()நகரப் பகுதிகள்)

  USD 200,000

  10 வருடங்கள் விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்
  கூட்டு ஆதனங்கள்
  (நகரப் பகுதிகள்)

  USD 150,000

  5 வருடங்கள் மற்றும் நீடிக்கப்படக்கூடியது விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்
  கூட்டு ஆதனங்கள்
  (புறநகர் பகுதிகள்)

  USD 75,000

  5 வருடங்கள் மற்றும் நீடிக்கப்படக்கூடியது விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்
  விண்ணப்பிக்கும் நிறுவனம்
  கூட்டு ஆதனங்கள்
  (நகரப் பகுதிகள்)
  1. ஒருகூட்டு ஆதனம் USD 500,000
  2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டகூட்டு ஆதன அலகுகள், ஒவ்வொன்றும் USD 150,000க்கு மேல் பெறுமதியானவையாகவும் மொத்தப் பெறுமதி குறைந்தபட்சம் USD 500,000 ஆகவும் இருத்தல் வேண்டும்.
  5 வருடங்கள் 4  பணிப்பாளர்கள் அவர்களது வாழ்க்கைத்துணை மற்றும் தங்கிவாழ்வோர்
  கூட்டு ஆதனங்கள்
  (புறநகர் பகுதிகள்)

  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டகூட்டு ஆதன அலகுகள், ஒவ்வொன்றும் USD 75,000க்குமேல் பெறுமதியானவையாகவும் மொத்தமாக குறைந்தபட்சம் USD 500,000 ஆகவும் இருத்தல் வேண்டும்.

  5 வருடங்கள் 4  பணிப்பாளர்கள் அவர்களது வாழ்க்கைத்துணை மற்றும் தங்கிவாழ்வோர்

  படிமுறை 1
  வீசா பணிகளுக்காக தொடர்மாடி சொத்துக்களை பதிவுசெய்தல்
  ஏற்புடைய விண்ணப்பப்படிவத்தை இங்கு தரவிறக்கம் செய்க.
  தொடர்மாடி ஆதன அபிவிருத்தியாளரினால்  கோரிக்கை கடிதத்துடன் இந்த விண்ணப்பப்படிவத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைத்தல் வேண்டும்.

  படிமுறை 2
  (தனியான தொடர்மாடி அலகுகளை கொள்வனவு செய்யும்) விண்ணப்பதாரி / விண்ணப்பிக்கும் கம்பனியினால் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. உரிய முறையில் பூரணப்படுத்திய வதிவிட வீசா விண்ணப்பப்படிவம் (விண்ணப்பப்படிவத்தை இங்கு தரவிறக்கம் செய்க)
  2. விண்ணப்பதாரியின் சுயவிபர பிரகடனம் (விண்ணப்பப்படிவத்தை இங்கு தரவிறக்கம் செய்க)
      மாதிரிப் படிவம் 1 (தனியான விண்ணப்பதாரிகளுக்கு)
      மாதிரிப் படிவம் 2 (விண்ணப்பிக்கும் கம்பனிக்கு)
  3. அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதி மற்றும் உறுதியின் மூலப் பிரதி
  4. காணிப் பதிவாளர் திணைக்களத்தினால் பூரணப்படுத்தப்பட்டமாதரிப் படிவம் 4 தற்கிழமை உறுதி மற்றும் விலைமதிப்பீட்டு அறிக்கை
   
 4. திறைசேரி  பிணைமுறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்தல்

  தகுதியானவர்கள் : விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர்
  உதவியாளர்கள்,
  சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள் – மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

  சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : இலங்கை மத்திய வங்கி

  வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு

   
   

  குறைந்த முதலீடு

  காலப் பிரிவு
  திறைசேரி  பிணைமுறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் அபிவிருத்தி முறிகள்

  USD 250,000

  5 வருடங்கள்

  USD 400,000

  10 வருடங்கள்
 5. இலங்கைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல்

  தகுதியானவர்கள் : விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர்உதவியாளர்கள்,
  சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள் – மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

  சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : இலங்கை மத்திய வங்கி / இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு

  வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு

   
   

  குறைந்த முதலீடு

  காலப் பிரிவு
  இலங்கைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல்

  USD 100,000

  05 வருடங்கள்

  USD 200,000

  10 வருடங்கள்எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

 • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
 • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
 • பத்தரமுல்லை.
 • +94 011 5329 000
 • +94 011 2885 358
 • controller@Immigration.gov.lk
827336