குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்

இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு கீழ்க் காட்டப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்ட நாடுகளுக்கு அங்கு குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கு தமது உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளும் போது இலவச வீசாக்களை (Gratis Visa)  பெற்றுக் கொள்ள முடியும். (அதே போன்று அந் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுளை வைத்திருப்போருக்கும் இது ஏற்புடையதாகும்).

நாடு கடவுச்சீட்டு வகை வீசா காலம்
வியட்நாம் சோசலிசக் குடியரவு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
கியுபா குடியரசு இராஜந்தந்திர 90 நாட்கள்
இந்தோனேசியா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
மியன்மார் சங்கம் இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
பிரேசில் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 90 நாட்கள்
சிலீ குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
ஷிஷெல்ஸ் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான ஒவ்வொரு பயணத்திற்கும் 60 நாட்கள் கிடைப்பதுடன், இதனை 90 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம்
மக்கள் சீனக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ, சேவை மற்றும் அரச நடவடிக்கைகள் 30 நாட்கள்
தாய்லாந்து இராச்சியம் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
கென்யா குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
பெலரஸ் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ஈரான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
மாலைத்தீவுகள் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான 90 நாட்கள் வரை வீசா கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான 30 நாட்கள்
இந்திய குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ரஷ்யா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
பிலிப்பைன்ஸ் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ஜோர்ஜியா அரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ / சேவை எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத
ஹொங்கொங் விசேட நிருவாக வலயம் (HKSAR) ஹொங்கொங் விசேட நிருவாக வலயத்தைச் (HKSAR) சேர்ந்த செல்லுபடியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் 30 நாட்கள்
கசகஸ்தான் குடியரசு இராஜந்தந்திர மற்றும்  சேவை 30 நாட்கள்
ருமேனியா குடியரசு இராஜந்தந்திர
எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத
பங்களாதேஷ் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
உக்ரைன் இராஜந்தந்திர, சேவை அல்லது  உத்தியோகபூர்வ
எந்தவொரு 60 நாள் காலப்பகுதிக்குள்ளும் 30 நாட்களுக்கு மேற்படாத
ஓமான் அமீரகம் இராஜதந்திர,  விசேட அல்லது  சேவைகள் 90 நாட்களுக்கு  மேற்படாத, முதல் வருகையிலிருந்து 180 நாட்களுக்குள்
பஹ்ரேன் இராச்சியம் இராஜதந்திர அல்லது விசேட 90 நாட்களுக்கு  மேற்படாத, முதல் வருகையிலிருந்து 180 நாட்களுக்குள்
கம்போடியா இராச்சியம் இராஜந்தந்திர, சேவை/ உத்தியோகபூர்வ 30 நாட்கள்
கட்டார் அரசு இராஜந்தந்திர மற்றும் விசேட 30 நாட்கள் வரைஎங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
17485319