இடைத்தங்கல் வீசா
இடைத்தங்கல் வீசா என்றால் என்ன?
இடைத்தங்கல் வீசா என்பது அச்சொற்றொடரில் கூறுவதைப் போன்ற வெளிநாட்டவரொருவர் பிறிதொரு நாட்டுக்குச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக குறுகிய காலத்திற்கு இலங்கைக்குள்ளே வருவதற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும்.
இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான தகைமைகள் யாவை?
இலங்கையூடாக வேறொரு நாட்டுக்குச் செல்லும் எந்தவொரு நாட்டையும் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவராகஇருப்பது இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான ஒரேயொரு தகைமையாகும். பிறிதொரு நாட்டுக்குச் செல்கின்ற வேளையில் இலங்கையில் பிரவேசித்து அதே கப்பலில் அல்லது விமானத்தில் பயணிக்கும் பயணி இடைத்தங்கல் வீசா பெற வேண்டிய அவசியம் கிடையாது.
விமானக் கம்பெனியொன்று ஆளொருவரையோ ஆட்களையோ நாட்டுக்கு கொண்டுவந்து அடுத்படியாக புறப்படவுள்ள விமானத்தில் ஏற்றிச் செல்லுமாயினும் அவ்வாறு வந்தவர்களின் பெயர்ப் பட்டியலொன்றைச் சமர்ப்பிக்குமிடத்து அத்தகைய பயணிகளுக்கு இடைத்தங்கல் வீசா அவசியமில்லை.
இடைத்தங்கல் வீசா விண்ணப்பப்பத்திரமொனறை நான் எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?
இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எவ்வாறு சமர்ப்பிப்பது?
தங்களது இடைத்தங்கல் வீசா விண்ணப்பத்தைஅருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திலோ அல்லது https://www.eta.gov.lk ETA இணையத்தளத்தில் இணைய வழியில் சமர்ப்பிக்கலாம்.
எனது இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பிறிதொரு நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போது தற்காலிகமாக குறுகிய காலப்பகுதிக்கு இலங்கைக்கு உட்பிரவேசிப்பதை அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்கள்.
இடைத்தங்கல் வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?
02 நாட்களுக்கு வீசா கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என்பதுடன் இக் காலப்குதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது. அதே போன்று அதனை பிறிதொரு வீசா வகையொன்றிற்கு மாற்றவும் முடியாது.
இடைத்தங்கல் வீசாவுக்கான அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் போதுஅதிகபட்சமாக02 நாட்களுக்கு இடைத்தங்கல் வீசா வழங்கப்படும்.